125சிசி ஆக்டிவா ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் ஹோண்டா
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய 125சிசி ஸ்கூட்டர் மாடலை ஹோண்டா அறிமுகப்படுத்த இருக்கிறது.
இந்த புதிய ஸ்கூட்டர் ஆக்டிவா 125 என்ற பெயரில் வரலாம் என்று ஆட்டோகார் இந்திய தளத்தின் செய்தி கூறுகிறது. தற்போது 125சிசி மார்க்கெட்டில் சுஸுகியின் ஸ்விஷ், அக்செஸ், வெஸ்பா 125, மஹிந்திராவின் டியூரோ, ரோடியோ ஆகிய மாடல்கள் ஆக்கிரமித்துள்ளன.

இந்த செக்மென்ட்டில் மாடல் இல்லாமல் இருந்து வந்த ஹோண்டா நிறுவனம் தற்போது தனது முதல் 125சிசி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது வாடிக்கையாளர் மத்தியில் ஆவலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த புதிய ஸ்கூட்டரின் எஞ்சினும் ஹோண்டாவின் HET தொழில்நுட்பத்துடன் வரும் என தெரிகிறது. அதிக பவர் மற்றும் சிறந்த எரிபொருள் சிக்கனம் தரும் 125சிசி ஸ்கூட்டர் மாடலாக இது இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








