டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வரும் ஹயோசங் பைக் மாடல்கள் விபரம்!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் புதிய உத்வேகம் பிடிக்கும் பணிகளை ஹயோசங் - டிஎஸ்கே கூட்டணி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஒரு புதிய குருஸர் பைக்கை விற்பனைக்கு கொண்டு வரவும், அடுத்து அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கும் 2 புதிய மாடல்களை காட்சிக்கு வைக்கவும் இருப்பதாக ஹயோசங் இன்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் மாடல்
வேகமாக வளர்ந்து வரும் 250 சிசி மார்க்கெட்டில் புதிய அக்குய்லா 250 குரூஸர் பைக்கை விற்பனைக்கு கொண்டு வருகிறது ஹயோசங். ரூ.2 லட்சம் விலையில் வரும் என்று தெரிகிறது.

அக்குய்லா 250 எஞ்சின்
ஹயோசங் அக்குய்லா 250 குரூஸர் பைக்கில் வி ட்வின் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது 26.21 பிஎச்பி ஆற்றலை வழங்கும்.

2வது மாடல்
கடந்த ஆண்டு மிலன் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய 250சிசி பைக் நேக்டு ஸ்டைல் டிசைனில் வடிவமைக்கப்பட்டது. இந்த பைக்கை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. ரூ.1.6 லட்சம் விலையில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஹயோசங் ஜிடி250என் எஞ்சின்
ஜிடி 250என் பைக்கில் 28 எச்பி பவரை அளிக்கும் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது கேடிஎம் 200 பைக்குக்கு இணையான பெர்ஃபார்மென்ஸ் கொண்டது. இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

ஹயோசங் ஆர்டி 125டி
பெரிதும் எதிர்பார்க்கப்படும் 125சிசி பைக் மாடல் இது. மிக சவாலான விலையில் இந்த புதிய பைக்கை அறிமுகம் செய்ய ஹயோசங் - டிஎஸ்கே கூட்டணி திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த புதிய பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








