விரைவில் இந்தியா வரும் புதிய பெனெல்லி பைக் அறிமுகம்!

By Saravana

இத்தாலியில் நடைபெற்று வரும் இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் புதிய பெனெல்லி பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெனெல்லி பிஎன்- 251 என்ற பெயரிலான இந்த புதிய பைக் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கேடிஎம் டியூக் 200 மற்றும் 390 பைக் மாடல்களின் டிசைனை ஒத்திருக்கும் இந்த புதிய பைக் மாடல் பெனெல்லி நிறுவனத்தின் விலை குறைவான ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.


ஃப்ரேம்

ஃப்ரேம்

ட்ரெல்லிஸ் ஸ்டீல் ஃப்ரேம் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் மோனோ ஷாக் - அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. கேடிஎம் டியூக் பைக்குகள் போன்றே இதுவும் நேக்டு ஸ்டைல் மாடலிலான பைக்தான். அதேவேளை, டியூக் போன்று இல்லாமல் இதன் சைலென்சர் வெளிப்புறத்தில் நன்கு தெரியுமாறு டிசைன் செய்து பொருத்தியுள்ளனர்.

 வடிவம்

வடிவம்

இந்த புதிய பெனெல்லி பிஎன்- 251 பைக் 2,080மிமீ நீளமும், 805மிமீ அகலமும், 1,090மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல் பேஸ் 1,385மிமீ ஆகும். 130மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்கில் 249சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது சிங்கிள் சிலிண்டர் எஞ்சின். அதிகபட்சமாக 24.5 பிஎஸ் பவரையும், 21 என்எம் டார்க்கையும் வழங்கும்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

புதிய பெனெல்லி பிஎன்- 251 பைக்கில் 17 இஞ்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், அனலாக் மீட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 6, 2014, 11:49 [IST]
English summary

 The Benelli BN251, which is to go on sale in India soon, was unveiled at the EICMA 2014. Being the smallest motorcycle in the Benelli line up, it has a striking resemblance to the KTM Duke twins.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+