இந்தியாவில் புதிய இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிளுக்கு முன்பதிவு ஆரம்பம்!
இந்த மாத துவக்கத்தில் அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிளுக்கு இந்தியாவிலும் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மூன்று மாடல்களை விற்பனை செய்து வந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தற்போது ஸ்கவுட் மாடலையும் இந்தியாவில் விற்பனைக்கு விடுகிறது. பழையான டிசைனும், புதுமையான தொழில்நுட்பங்களுடன் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய க்ரூஸர் வகை பைக்கின் சில முக்கிய சிறப்பம்சங்கள் விலை விபரத்தை ஸ்லைடரில் காணலாம்.

முக்கிய சிறப்புகள்
முக்கிய சிறப்பம்சங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

எளிதான ஓட்டலாம்
பார்க்க பிரம்மாண்டமாக இருக்கும் இந்த அதிசக்திவாய்ந்த பைக்கை முதல்முறையாக ஓட்டுபவர்களும் எளிதாக ஓட்ட முடியும் என இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எடை
இந்த புதிய இந்தியன் ஸ்கவுட் பைக் 250 கிலோ எடை கொண்டது. ஆனால், கையாளுமையில் ஜோராக இருக்கும் என இந்தியன் நிறுவனம் தெரிவிக்கிறது.

வண்ணங்கள்
4 வண்ணங்களில் அமெரிக்காவில் விற்பனைக்கு கிடைக்கும். இதில், மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட மாடல்களும் அடங்கும்.

விலை விபரம்
அமெரிக்காவில் 10,999 டாலர் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த புதிய பைக் மாடல் இந்தியாவில் ரூ.11.99 லட்சம் விலையில் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








