பைக் திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்த இந்தியன் ஸ்கவுட்!
கடந்த இரு தினங்களாக டெல்லி அருகே புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த பைக் ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா பைக் திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில், பிரத்யேகமான சில மோட்டார்சைக்கிள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில், இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மிக பிரத்யேகமான டிசைன் கொண்ட இந்த புதிய பிரிமியம் மோட்டார்சைக்கிள் மாடல் இந்தியாவில் முதல்முறையாக பொது இடத்தில் தரிசனம் தந்தது. அந்த மோட்டார்சைக்கிளை காண பைக் பிரியர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

இந்த புதிய மோட்டார்சைக்கிளில் 100 எச்பி பவரை அளிக்கும் வி- ட்வின் எஞ்சின் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ரூ.11.99 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்த இந்த புதிய மோட்டார்சைக்கிளுக்கு தற்போது முன்பதிவு நடந்து வருகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் டெலிலிரி கொடுக்கப்பட உள்ளது. இது தவிர, இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிற மாடல்களான இந்தியன் சீஃப் கிளாசிக், இந்தியன் சீஃப் விண்டேஜ், இந்தியன் சீஃப்டெயின் மாடல்களும் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிளை போலவே இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோணியின் ஹெல்கேட் மோட்டார்சைக்கிளும் பார்வையாளர்களை கவர்ந்தது.


Click it and Unblock the Notifications








