குர்கானில் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் ஷோரூம்
வரும் 7ந் தேதி இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் ஷோரூம் குர்கானில் திறக்கப்பட உள்ளது.
அமெரிக்க பிராண்டான இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது க்ரூஸர் ரக பிரிமியம் மோட்டார்சைக்கிள்களை ஏற்கனவே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துவிட்டது. ஆனால், முதல் ஷோரூமை இப்போதுதான் திறக்க உள்ளது.

டெல்லி அருகே குர்கான் நகரில் பி-10, இன்ஃபோசிட்டி, செக்டர்-34 என்ற முகவரியில் இந்த புதிய ஷோரூம் செயல்பட உள்ளது. இந்த புதிய ஷோரூமை போலரிஸ் நிறுவனத்தின் சிஓஓ., பென்னட் மார்கன் மற்றும் போலரிஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரர் பங்கஜ் துபே ஆகியோர் இணைந்து திறந்து வைக்க உள்ளனர்.
இந்த புதிய ஷோரூமில் இந்தியன் சீஃப் கிளாசிக், இந்தியன் சீஃப் விண்டேஜ் மற்றும் இந்தியன் சீஃப்டெயின் ஆகிய மூன்று மாடல்கள் விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








