இந்தாங்க லன்ச் டைம் செய்தி... ஒரு வித்தியாசமான எலக்ட்ரிக் பைக்!!

By Saravana

எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களை வடிவமைப்பதில் பல நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் மாசுக்கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கும் வாய்ப்பு இருப்பதால், இப்போதே அந்த நெருக்கடியை தீர்த்துக் கொள்ள பல நிறுவனங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

மாசுக்கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாகும்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வர்த்தகம் அதிகம் இருக்கும் என்பதால் பல புதிய நிறுவனங்களும் இந்த சந்தையின் எதிர்கால வலுவை மனதில்கொண்டு இப்போதே உழைத்து வருகின்றன.

அந்த வகையில், ஆஸ்திரியாவை சேர்ந்த ஹாமர்ச்மிட் மெசின்பாவ் என்ற நிறுவனம் ஹோஹம்மர் என்ற புதிய எலக்ட்ரிக் பைக்கை வெளியிட்டிருக்கிறது. வழமையான டிசைன் தாத்பரியங்களை புறந்தள்ளிவிட்டு, முற்றிலும் புதுமையான டிசைனில் வடிவமைத்துள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கில் பயணம் செய்வது குதிரை சவாரி போல இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த புதிய பைக்கின் சிறப்பம்சங்களையும், படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

இரு வேரியண்ட்டுகள்

இரு வேரியண்ட்டுகள்

இந்த புதிய எலக்ட்ரிக் பைக் ஜே1.150 மற்றும் ஜே1.200 என்ற இரு மாடல்களில் வந்துள்ளது. இவை முறையே 158 கிலோ மற்றும் 177 கிலோ எடை கொண்டவை.

பேட்டரி திறன்

பேட்டரி திறன்

ஜே1.150 மாடலில் 8.3 kWh பேட்டரியும், ஜே1.200 பைக்கில் 12.7 kWh பேட்டரியும் பொருத்தப்பட்டிருக்கிறது.

சார்ஜ் நேரம்

சார்ஜ் நேரம்

ஒருமுறை சார்ஜ் செய்வதற்கு இரண்டரை மணி நேரம் பிடிக்கும்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஜே1.150 மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரமும், ஜே1.200 மாடலின் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரையிலும் செல்லும் திறன் கொண்டதாக இருக்கின்றன.

அதிகபட்ச தூரம்

அதிகபட்ச தூரம்

இருசக்கர வாகனங்களிலேயே அதிகபட்ச ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் பைக்காக இதனை தயாரிப்பு நிறுவனம் குறிப்பிடுகிறது.

ஆயுட்கால பேட்டரிகள்

ஆயுட்கால பேட்டரிகள்

இந்த புதிய எலக்ட்ரிக் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரிகளை அடிக்கடி மாற்ற வேண்டியதில்லை. ஆயுட்காலம் அதிகம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

பைக்கின் பிரேக் சிஸ்டம், ஆக்சிலரேஷன் ஆகிய அனைத்தும் கைகளிலேயே இயக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன. கால்களுக்கு எந்த வேலையும் இல்லை.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

வெள்ளி, வெள்ளை, நீலம், மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

விலை

விலை

இது 25,000 யூரோ விலை கொண்டது. இந்திய மதிப்புக்கு மாற்றினால் ரூ.21 லட்சம் விலை கொண்டதாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, April 28, 2014, 13:58 [IST]
English summary
An Austrian company Hammerschmid Maschinenbau has developed an electric bike that they call the Johammer. Like most electric vehicle it breaks apart from the conventional design of a two wheeler.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+