புதிய கவாஸாகி வெர்சிஸ் பைக்கிற்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

By Saravana

இந்த மாத இறுதியில் அட்வென்ச்சர் டூரர் ரகத்தில் புதிய கவாஸாகி உயர்வகை பைக் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய பைக் மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் சமீபத்தில் நடந்த இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட கவாஸாகி வெர்சிஸ் 1000 ஃபேஸ்லிஃப்ட் மாடல்தான் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மேலும், இசட்250 மற்றும் இஆர்- 6என் ஆகிய இரு பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்த அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்த புதிய அட்வென்ச்சர் டூரர் ரக பைக் மாடலையும் கவாஸாகி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.


மூன்றாவது வகை

மூன்றாவது வகை

இந்தியாவில் நின்ஜா வரிசையில் ஸ்போர்ட்ஸ் ரக பைக் மாடல்களையும், இசட்(Z) என்ற வரிசையில் நேக்டு ஸ்டைல் ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரக மாடல்களையும் கவாஸாகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, வெர்சிஸ் என்ற பிராண்டில் புதிய அட்வென்ச்சர் டூரர் ரக பைக் மாடலை இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது கவாஸாகி.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய பைக் மாடலில் 122பிஎஸ் பவரையும், 102என்எம் டார்க்கையும் வழங்கும் 1,043சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

3 விதமான ஆப்ஷன்களை கொண்ட டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், சிறப்பான செயல்திறனை வழங்கும் வகையில் மேப்பிங் செய்யப்பட்ட எஞ்சின், லக்கேஜ் பாக்ஸ் போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

முன்பதிவு

முன்பதிவு

இந்த புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் மாடலுக்கு ரூ.6 லட்சம் முன்பணத்துடன் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்த பைக் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

இந்த புதிய பைக் மாடல் ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Japanese motorcycle major Kawasaki is all set to bring it’s new Versys 1000 to Indian market.
Story first published: Saturday, November 15, 2014, 9:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X