பெங்களூரில் கவாஸாகி சூப்பர் பைக்குகளுக்கான பிரத்யேக ஷோரூம் திறப்பு

By Saravana

பெங்களூரில் கவாஸாகி சூப்பர் பைக்குகளுக்கான பிரத்யேக ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. பெங்களூரின் அங்கீகாரம் பெற்ற டீலராக நியமிக்கப்பட்டிருக்கும் கிவ்ராஜ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த புதிய பைக் ஷோரூமை அமைத்துள்ளது.

ஏற்கனவே பஜாஜ் ஆட்டோவின் துணையுடன் நின்ஜா 300 மற்றும் நின்ஜா 650 ஆகிய பைக்குகளை இந்தியாவில் பிரத்யேக ஷோரூம்களின் மூலம் கவாஸாகி விற்பனை செய்து வந்தது. இந்த நிலையில், நின்ஜா மற்றும் இசட் வரிசையிலான தனது சூப்பர் பைக்குகளுக்காக இந்தியாவில் தனியாக ஷோரூம்களை திறந்து வருகிறது கவாஸாகி. டெல்லி, புனே நகரங்களை தொடர்ந்து தற்போது பெங்களூரிலும் தனது மூன்றாவது புதிய ஷோரூமை திறந்துள்ளது.

பெங்களூரில் புதிய பைக்குகளை அறிமுகம் செய்து வைத்த பேசிய கவாஸாகி இந்தியா நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் ஷிகெட்டோ நிஷிகவா கூறுகையில்," கடந்த சில ஆண்டுகளாக இந்திய சூப்பர் பைக் மார்க்கெட்டை கூர்ந்து கவனித்து வருகிறோம். ஆய்வுகள் மற்றும் பின்னூட்டங்களின் அடிப்படையில் எங்களது புதிய பைக் மாடல்களை இந்தியாவில் இறக்கி வருகிறோம்.

மிகச் சிறந்த செயல்திறன் மிக்க இந்த பைக்குகள் அனைத்தும் 200 கிலோவுக்கும் அதிகமான எடையும், 16 கிமீ முதல் 20 கிமீ மைலேஜ் தரும் வகையிலும் இருக்கும். மேலும், இந்திய சாலைநிலைகள் மற்றும் சீதோஷ்ண நிலைகளுக்கு தக்கவாறு மாற்றங்களை செய்துள்ளோம். இந்திய இளைஞர்களின் கனவை நனவாக்கும் வகையில் பட்ஜெட்டையும் மனதில் கொண்டு சரியான விலையில் எங்களது தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறோம்," என்று கூறினார்.

மேலும், பெங்களூரில் 5 புதிய உயர்ரக பைக் மாடல்களையும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அந்த பைக் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

1. கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்14ஆர்

1. கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்14ஆர்

எஞ்சின்: 4 சிலிண்டர், லிக்யூடு கூல்டு

டிஸ்ப்ளேஸ்மென்ட்: 1,441சிசி

அதிகபட்ச சக்தி: 210 பிஎச்பி

அதிகபட்ச டார்க்: 162.5 என்எம் @7,500ஆர்பிஎம்

விலை: ரூ.17,15,802 (பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலை)

 2. கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர்

2. கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர்

எஞ்சின்: லிக்யூடு கூல்டு 4 சிலிண்டர்

டிஸ்ப்ளேஸ்மென்ட்: 998சிசி

அதிகபட்ச பவர்: 200பிஎச்பி

அதிகபட்ச டார்க்: 112 என்எம் @11,500ஆர்பிஎம்

விலை: ரூ.15,96,461 (பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலை)

 3. கவாஸாகி நின்ஜா 1000

3. கவாஸாகி நின்ஜா 1000

எஞ்சின்: லிக்யூடு கூல்டு 4 சிலிண்டர்

டிஸ்ப்ளேஸ்மென்ட்: 1,043சிசி

அதிகபட்ச பவர்: 138பிஎச்பி

அதிகபட்ச டார்க்: 100என்எம்@ 8,800ஆர்பிஎம்

விலை: ரூ.12,74,613 (பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலை)

4. கவாஸாகி இசட்1000

4. கவாஸாகி இசட்1000

எஞ்சின்: லிக்யூடு கூல்டு 4 சிலிண்டர்

டிஸ்ப்ளேஸ்மென்ட்: 1,043சிசி

அதிகபட்ச பவர்: 142பிஎச்பி

அதிகபட்ச டார்க்: 100என்எம்@ 7,300ஆர்பிஎம்

விலை: ரூ.12,74,613 (பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலை)

இது முந்தைய ஸ்லைடில் பார்த்த நின்ஜா 1000 பைக்கின் நேக்டு ஸ்டைல் மாடல் ஆகும்.

 5. கவாஸாகி இசட்800

5. கவாஸாகி இசட்800

எஞ்சின்: லிக்யூடு கூல்டு 4 சிலிண்டர்

டிஸ்ப்ளேஸ்மென்ட்: 806சிசி

அதிகபட்ச பவர்: 113பிஎச்பி

அதிகபட்ச டார்க்: 83என்எம்@ 8,000ஆர்பிஎம்

விலை: ரூ.8,30,249 (பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலை)

More from DriveSpark

Article Published On: Thursday, July 3, 2014, 10:51 [IST]
English summary
Kawasaki has launched five new models in India. The Japanese motorcycle manufacturer launched five of their internationally sold bikes in association with Khivraj Group in Bangalore. The new bikes range from 800cc to 1400cc.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+