கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் விலை திடீர் உயர்வு: கேடிஎம் ஆர்சி390க்கு வாய்ப்பு பிரகாசம்

By Saravana

கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் விலை ரூ.10,000 உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வுக்கான காரணங்கள் குறித்து கவாஸாகி எந்தவொரு காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

கவாஸாகி நின்ஜா 300 பைக்கிற்கு நேரடி போட்டியாக சமீபத்தில் கேடிஎம் ஆர்சி390 பைக் விற்பனைக்கு வந்தது. இதனால், இந்த நின்ஜா 300 பைக்கின் விலையை கவாஸாகி குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர் மாறாக நின்ஜா 300 பைக்கின் விலையை எந்த காரணமும் தெரிவிக்காமல் உயர்த்தியுள்ளது.


 எக்ஸ்ஷோரூம் விலை

எக்ஸ்ஷோரூம் விலை

கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் விலை ரூ.396 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் என்று உயர்த்தப்பட்டுள்ளது.

ஏபிஎஸ் இல்லை

ஏபிஎஸ் இல்லை

கேடிஎம் ஆர்சி390 பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர ஆக்சஸெரீயாக கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், கவாஸாகி நின்ஜா 300 பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு மற்றும் சிறப்பம்சங்கள் எதுவும் இல்லை.

விலை வித்தியாசம்

விலை வித்தியாசம்

இருப்பினும் ஆன்ரோடு விலை ரூ.4 லட்சத்துக்கும் அதிகம். ஆனால், நின்ஜா 300 பைக்கைவிட கேடிஎம் ஆர்சி 390 பைக் ரூ.1.5 லட்சம் வரை குறைவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

கேடிஎம் ஆர்சி390 பைக்கில் 9,000 ஆர்பிஎம்.,மில் 43.5 பிஎஸ் பவரையும், 35 என்எம் டார்க்கையும் அளிக்கும் 373.27சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், நின்ஜா 300 பைக்கில் 11,000 ஆர்பிஎம்.,மில் 39 பிஎஸ் பவரையும், 27 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும் 296சிசி பேரலல் ட்வின் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

மவுசு குறையுமா?

மவுசு குறையுமா?

கேடிஎம் ஆர்சி390 பைக்கின் வரவால் கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் விற்பனையில் அதிக பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது. அதேவேளை, விலை அதிகரிக்கப்பட்டிருப்பதால், நின்ஜா 300 பைக்கை சற்று பிரிமியம் மாடலாக முன்னிலைப்படுத்த கவாஸாகி முனைந்திருப்பதாக கருதப்படுகிறது. மேலும், நின்ஜா 300 பேரலல் ட்வின் லிக்யூடு கூல்டு எஞ்சின் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 புதிய மாடல்

புதிய மாடல்

நின்ஜா 300 பைக்கின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதால், கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாக புதிய பைக் மாடலை கவாஸாகி அறிமுகம் செய்யும் வாய்ப்பும் இருப்பதாக யூகங்கள் எழுந்துள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, September 26, 2014, 10:13 [IST]
English summary
Kawasaki has hiked Ninja 300 price by INR.10,000 of its ex-showroom price tag, making the premium sports bike cost Rs. 3.96 lakhs on-road Mumbai.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+