சென்னையில் கவாஸாகி உயர்வகை பைக் ஷோரூம் திறப்பு!
சென்னையில் கவாஸாகி நிறுவனத்தின் புதிய பைக் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. ஜாபர்கான்பேட்டை, அஞ்சுகம் நகரில் உள்ள இ.கே.ஆர் பிளாஸாவில் இந்த புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பைக் ஷோரூம் 1,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூமில் பிரத்யேக சர்வீஸ் மையமும் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஷோரூமில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரூ.8 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரையிலான பிரிமியம் பைக்குகள் இந்த புதிய ஷோரூம் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த புதிய பைக் ஷோரூமில் உயர்வகை கவாஸாகி பைக்குகள் மட்டும் விற்பனை செய்யப்படும்.
நின்ஜா 300 மற்றும் நின்ஜா 650 உள்ளிட்ட கவாஸாகி பைக்குகள் பஜாஜ்- கேடிஎம் மற்றும் கவாஸாகி கூட்டணியிலான புரோபைக்கிங் ஷோரூம்கள் வழியாக விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








