புதிய கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக் அறிமுகம்- முழு விபரம்

By Saravana

சில வாரங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட நின்ஜா எச்2ஆர் ரேஸ் பைக்கின் ஸ்ட்ரீட் வெர்ஷன் மாடலான புதிய கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய பைக் மாடல் லிமிடேட் எடிசனாக விற்பனை செய்யப்பட உள்ளது. சூப்பர்சார்ஜர்கள் கொண்ட எஞ்சினுடன் மிகவும் சக்திவாய்ந்த பைக் மாடலாக வந்திருக்கும் நின்ஜா எச்2 பைக்கின் கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.


டிசைன்

டிசைன்

அதிசக்திவாய்ந்த இந்த புதிய பைக்கில் இழுவிசையை குறைக்கும் விதத்தில் சிறப்பான ஏரோடைனமிக் தாத்பரியத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கவாஸாகி நிறுவனத்தின் ஏரோஸ்பேஸ் பிரிவின் ஒத்துழைப்புடன் இந்த புதிய பைக்கின் பாடி டிசைன் செய்யப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

கவாஸாகி நின்ஜா எச்2 பைக்கில் 10,000ஆர்பிஎம்.,மில் 140.4 என்எம் டார்க்கை அளிக்கும் 4 சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

குயிக்ஷிஃப்டர் ஆப்ஷன்

குயிக்ஷிஃப்டர் ஆப்ஷன்

இந்த பைக்கின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று குயிக்ஷிஃப்டர் வசதி. பெரும்பாலும் ரேஸ் பைக்குகளில் தரப்படும் இந்த குயிக்ஷிஃப்டர் வசதி மூலம், கியரை மாற்றுவதற்கு கிளட்ச் மற்றும் ஆக்சிலேட்டரை தொடாமல் நேரடியாக மாற்ற முடியும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

பின் இருக்கை கிடையாது. இந்த பைக் கவாஸாகியின் இசட்எக்ஸ்- 10ஆர் பைக்கைவிட சிறப்பான ரைடிங் பொசிஷன் கொண்டிருக்கும் என்று கவாஸாகி தெரிவித்துள்ளது. மூன்றுவிதமாக மாற்றிக் கொள்ளும் வசதியுடன் கூடிய டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. ஒன்று டிராக்கில் பயன்படுத்தும் விதமாகவும், இரண்டாவது சாதாரண சாலைகளுக்கானதாகவும் மற்றொன்று ஈரப்பதமான சாலைகளில் செல்வதற்கானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முன்பதிவு

முன்பதிவு

கவாஸாகி நின்ஜா எச்2 மற்றும் எச்2ஆர் பைக் மாடல்கள் லிமிடேட் எடிசன் மாடல்கள் என்றும், முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படும் என்றும் கவாஸாகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.15.33 லட்சம் விலையில் விற்பனைக்கு செல்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 6, 2014, 10:26 [IST]
English summary
Japanese motorcycle manufacturer Kawasaki, has revealed the street legal version of their supercharged bike, the Ninja H2.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+