கவாஸாகியின் புதிய 'என்ட்ரி லெவல்' க்ரூஸர் பைக்: இந்தியாவுக்கு உண்டு?!

By Saravana

வல்கன் எஸ் என்ற புதிய பிரிமியம் க்ரூஸர் பைக் மாடலின் படங்கள், விபரங்களை கவாஸாகி வெளியிட்டுள்ளது. கவர்ச்சியான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சினுடன் வந்திருக்கும் இந்த புதிய பைக் உலக அளவில் விற்பனைக்கு செல்லும் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நின்ஜா 650 பைக்கின் நேக்டு ஸ்டைல் மாடலான இஆர்- 6என் பைக் மாடல் சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இதேபோன்று, நின்ஜா 650 பைக்கின் க்ரூஸர் மாடலாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கவாஸாகியின் "என்ட்ரி லெவல்" க்ரூஸர் பைக்காக விற்பனைக்கு செல்கிறது. இந்த புதிய மாடல் இந்தியாவிலும் விற்பனைக்கு வருவதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் பார்க்கலாம்.


ஃப்ரேம்

ஃப்ரேம்

கவாஸாகி வல்கன் எஸ் பைக்கில் "டபுள் பைப் பெரிமீட்டர் ஸ்டீல்" ஃப்ரேம் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் எடைக்கு தகுந்தவாறு அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி கொண்ட பின்புற ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 61.12எச்பி பவரையும், 62என்எம் டார்க்கையும் அளிக்கும் 649சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது.

ஏபிஎஸ்

ஏபிஎஸ்

இந்த பைக்கில் ஆப்ஷனலாக ஏபிஎஸ் பிரேக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் விருப்பத்தின்பேரில் ஏபிஎஸ் பிரேக் தரப்படும்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

கேண்டி லைம் க்ரீன், ஃப்ளாட் எபோனி மற்றும் பியர்ல் கிறிஸ்டல் ஒயிட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இந்த க்ரூஸர் ரக பைக் 226 கிலோ எடை கொண்டது.

விலை

விலை

அமெரிக்காவில் ஏபிஎஸ் கொண்ட மாடல் ரூ.4,52,633 விலையிலும், ஏபிஎஸ் இல்லாத மாடல் ரூ.4,28,163 விலையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

போட்டியாளர்

போட்டியாளர்

இந்த புதிய பைக் மாடல் ஹார்லி டேவிட்சன் 750 மோட்டார்சைக்கிள் மாடலுக்கு நேரடி போட்டியாக இருக்கும். அடுத்த மாதம் இத்தாலியில் நடைபெற இருக்கும் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த புதிய பைக் முறைப்படி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, October 27, 2014, 13:44 [IST]
English summary
The Japanese manufacturer has christened its cruiser bike the ‘Vulcan S'. It is based on their existing line-up of Ninja 650 and their ER-6N. This will be Kawasaki's entry level cruiser motorcycle across the globe.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+