இளசுகளை சுண்டி இழுக்கும் டிசைன்... வருகிறது கவாஸாகி இசட்250!!

By Saravana

இந்திய மார்க்கெட்டில் என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கான வரவேற்பு அதிகம் இருக்கிறது. இதன் காரணமாக முன்னணி நிறுவனங்கள் இந்த செக்மென்ட்டில் புதிய மாடல்களை நிலைநிறுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

அந்த வகையில், ஜப்பானிய நிறுவனமான கவாஸாகி புதிய நேக்டு ஸ்டைல் பைக்கை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் நம் நாட்டு மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த கவாஸாகி இசட்800 பைக்கின் மினி மாடலாக இசட்250 பைக்கை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது கவாஸாகி. ஸ்டைலான இந்த புதிய பைக் நிச்சயம் பெரிய ஹிட்டடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்த பைக் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்

தோற்றம்

தோற்றத்தில் இசட்800 பைக்குக்கும், இசட்250 பைக்குக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. முகப்பு டிசைன்கூட கிட்டத்தட்ட அப்படியே ஒத்திருக்கிறது. ஸ்பிளிட் இருக்கைகள், இசட் வடிவிலான எஞ்சின் கவர் போன்றவை வேறுபடுத்துகின்றன. இந்த பைக்கின் தோற்றம் இளைஞர்களை பெரிதும் கவரும்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

அனலாக் மற்றும் டிஜிட்டல் மீட்டர்களுடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 33 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் பேரலல் ட்வின் எஞ்சின் உள்ளது. அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் ட்யூவல் த்ரோட்டில் வால்வ் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக்

இருசக்கரங்களிலும் சிங்கிள் பெட்டல் டிஸ்க் பிரேக்குகள் இருப்பது பாதுகாப்பை உறுதி செய்வதாக இருக்கும். பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் உள்ளது.

 அலாய் வீல்கள்

அலாய் வீல்கள்

10 ஸ்போக்குகள் கொண்ட 17 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

 விலை

விலை

இந்த ஆண்டு பிற்பகுதியில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய பைக் ரூ.2.5 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, March 3, 2014, 12:42 [IST]
English summary
The entry level performance motorcycle segment is fast becoming as crowded as the commuter bike segment in India. Nearly half a dozen new small displacement sports bikes will be debuting in India this year and joining that list will be the Kawasaki Z250.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+