புதிய வண்ணத்தில் கேடிஎம் டியூக்390 அறிமுகம்!
கருப்பு, ஆரஞ்ச் வண்ணக் கலவையில் புதிய கேடிஎம் டியூக் 390 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கேடிஎம் டியூக் 390 பைக் வெள்ளை ஆரஞ்ச் வண்ணக் கலவையில் மட்டும் அறிமுகமானது.

இந்த நிலையில், தற்போது கருப்பு நிறத்தில் ஆரஞ்ச் ஊடாடும் வகையிலான புதிய வண்ணத்தில் வந்துள்ளது. ஃப்ரேம் மற்றும் அலாய் வீல்களில் ஆரஞ்ச் வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது.
கேடிஎம் டியூக் 390 பைக்கில் 43.5 பிஎஸ் பவரையும், 35 என்எம் டார்க்கையும் அளிக்கும் 373சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
143 கிலோ எடை கொண்ட இந்த பைக் 0-100 கிமீ வேகத்தை 7 வினாடிகளில் எட்டும். உச்சபட்சமாக மணிக்கு 170 கிமீ வேகம் வரை செல்லும். ரூ.2.13 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








