விரைவில் விற்பனைக்கு வரும் புதிய கேடிஎம் ஆர்சி390 பைக்
இதுவரை திறந்த மேனி கொண்ட கேடிஎம் பைக்குகளை பார்த்து ரசித்த இந்திய வாடிக்கையாளர்களை தற்போது ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட கேடிஎம் மாடலையும் ரசிக்கும் விரைவில் கிடைக்க இருக்கிறது.
இந்த ஆண்டு மத்தியில் புதிய கேடிஎம் ஆர்சி390 ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நேக்டு டிசைன் கொண்ட கேடிஎம் டியூக் 390 பைக்கின் முழுவதுமான ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட மாடல்தான் கேடிஎம் ஆர்சி 390 பைக்.

எஞ்சின்
கேடிஎம் டியூக் 390 பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 43.5 பிஎச்பி ஆற்றலையும், 35 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

சோதனை
தற்போது புனே சுற்று வட்டாரப் பகுதிகளில் வைைத்து இந்த புதிய பைக் தீவிர டெஸ்ட்டிங் செய்யப்பட்டு வருகிறது.

விற்பனை
இந்த ஆண்டின் பிற்பகுதியில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு பஜாஜ் - கேடிஎம் கூட்டணி திட்டமிட்டுள்ளது.

விலை
ரூ.2 லட்சத்தையொட்டிய விலையில் இந்த புதிய பைக் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய மாடல்கள்
இதுதவிர, கேடிஎம் டியூக் 690 பைக்கும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது. படிப்படியாக கேடிஎம் பிராண்டில் அதிக திறன் கொண்ட பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








