செப்.9ல் ரிலீசாகும் கேடிஎம் ஆர்சி200 மற்றும் கேடிஎம் ஆர்சி 390 பைக்குகள்!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கேடிஎம் ஆர்சி200 மற்றும் கேடிஎம் ஆர்சி390 பைக்குகள் அடுத்த மாதம் 9ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றன.
ட்யூக் வரிசையில் இரண்டு நேக்டு ஸ்டைல் மாடல்களை விற்பனை செய்து வரும் கேடிஎம் நிறுவனம் முதன்முறையாக ஃபேர்டு வெர்ஷன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

புனேயில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த இரு புதிய பைக் மாடல்களையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜிவ் பஜாஜ் மற்றும் கேடிஎம் ஸ்போர்ட்மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஸ்டீபன் பியரர் ஆகியோவர் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளனர்.
ட்யூக் 200 மற்றும் ட்யூக்390 பைக்குகளின் ஃபேர்டு வெர்ஷன் மாடல்களாக வரும் இந்த புதிய பைக்குகளில் அதே எஞ்சின்கள்தான் பொருத்தப்பட்டிருக்கும். கேடிஎம் ஆர்சி 390 பைக்கில் 44எச்பி பவரை அளிக்கும் 375சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.
கேடிஎம் ஆர்சி200 பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 199.5சிசி எஞ்சின் 25எச்பி பவரையும், 19.2 என்எம் டார்க்கையும் வழங்கும். கேடிஎம் ஆர்சி200 பைக் ரூ.1.7 லட்சம் விலையிலும், கேடிஎம் ஆர்சி390 பைக் ரூ.2.5 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








