புத் பந்தய களத்தில் டியூக்390 பைக்கை ஓட்டிப் பார்ப்பதற்கான வாய்ப்பு!
சென்னை இருங்காட்டுக்கோட்டை மோட்டார் பந்தய களத்தில் கேடிஎம் டியூக் 390 பைக் உரிமையாளர்கள், தங்களது பைக்கை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பை கேடிஎம் நிறுவனம் சமீபத்தில் வழங்கியது. இது மிகச்சிறந்த அனுபவமாக வாடிக்கையாளர்கள் குறிப்பிட்டனர்.
இதேபோன்று ஒரு நிகழ்ச்சியை டெல்லி அருகே நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடத்துவதற்கு கேடிஎம் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

வரும் 15ந் தேதி டெல்லி ஃபார்முலா 1 டிராக்கில் கேடிஎம் டியூக் 390 பைக் உரிமையாளர்கள் தங்களது பைக்கை ஓட்டிப் பார்த்து மகிழும் வகையில் இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதற்கான முன்பதிவு அன்றைய தினம் காலை 7 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற உள்ளது.
பைக் மற்றும் தனி நபருக்கான காப்பீடு, ஓட்டுனர் உரிமம், பந்தய களத்தில் ஓட்டும்போது பாதுகாப்புக்காக அணியும் பிரத்யேக உடைகளுடன் கேடிஎம் டியூக் 390 பைக் உரிமையாளர்கள் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்டும் எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தங்களது பைக்கின் செயல்திறனை ஓர் பாதுகாப்பான இடத்தில் சோதித்து பார்க்கும் வாய்ப்பை டியூக் 390 பைக்கின் உரிமையாளர்கள் பெறலாம் என்று கேடிஎம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கேடிஎம் டியூக் 390 உரிமையாளர்களுக்கு பந்தய களத்தில் பைக்கை ஓட்டும்போது மனதில் கொள்ள வேண்டிய வழிகாட்டு முறைகளை பயிற்றுவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








