புதிய மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம் - விபரம்
நீண்ட கால தாமதத்திற்கு பின்னர் மஹிந்திராவின் புதிய மோஜோ ஸ்போரட்ஸ் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட இருக்கும் மோஜோவின் 2 மாடல்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சில முக்கிய விபரங்கள், படங்கள் ஸ்லைடரில் உள்ளன.

மாற்றங்கள்
ஸ்பை ஷாட்டுகளில் பார்த்த மோஜோவைவிட டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் மோஜோ பைக்கின் டிசைனில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹெட்லைட், பெட்ரோல் டேங்க் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ட்வின் ஹெட்லைட்
பகல்நேர ரன்னிங் விளக்குகளுடன் கூடிய ட்வின் ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், அனலாக் டாக்கோமீட்டர் கொண்டுள்ளது. செஞ்சூரோ பைக்கில் கொடுக்கப்பட்டிருப்பது போன்ற பல புதிய வசதிகள் இந்த பைக்கிலும் வரும் என நம்பலாம்.

எஞ்சின்
மஹிந்திரா மோஜோவில் 28 எச்பி ஆற்றலையும், 25 என்எம் டார்க்கையும் அளிக்கும் 295 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்
பெட்டல் டிஸ்க் பிரேக்குகள், பைரேல்லி டெமோன் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விற்பனை
அடுத்த சில மாதங்களில் இந்த புதிய பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








