அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் மஹிந்திரா மோஜோ!

By Saravana

அடுத்த மாதம் மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2010ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா மோஜோ பைக் கான்செப்ட் மாடலாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

Mahindra Mojo

இதைத்தொடர்ந்து, தீவிர சோதனை செய்யப்பட்ட நிலையிலும், அந்த பைக்கை மஹிந்திரா மார்க்கெட்டுக்கு கொண்டு வரவில்லை.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா மோஜோ பைக்கின் தயாரிப்பு நிலை மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

மேலும், அந்த பைக்கின் டிசைனிலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. தற்போது தீவிர சோதனையில் இருந்து வரும் இந்த பைக் அடுத்த மாதம் மத்தியில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய மஹிந்திரா ஸ்போர்ட்ஸ் பைக்கில் சிங்கிள் சிலண்டர் கொண்ட 295சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது 28 எச்பி பவரையும், 25 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், எல்இடி லைட்டுகள், டிஸ்க் பிரேக்குகள் கொண்டதாக வருகிறது. கேடிஎம் ட்யூக் 390 பைக் மார்க்கெட்டை குறிவைத்து இந்த பைக் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 20, 2014, 17:05 [IST]
English summary
Mahindra had showcased their first big bike, the Mojo, back in 2010. Since, then it has gone through various changes and modifications and was showcased at the 2014 Auto Expo. The bike has been spied several times in different avatars.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+