டிரைவ்ஸ்பார்க் கேமரா கண்களில் சிக்கிய மஹிந்திரா மோஜோ!

By Saravana

பெங்களூர் அருகே மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக் சோதனை செய்யப்பட்டு வருகிறது. தும்கூரிலிருந்து பெங்களூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலை எண் 4ல் சாலை சோதனை செய்யப்பட்ட அந்த பைக்கை எமது எடிட்டர்கள் படம் பிடித்துள்ளனர்.

மிக தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வரும் இந்த புதிய மஹிந்திரா ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக்கில் 292சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 25 பிஎச்பி பவரை அளிக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

படம்பிடிக்கப்பட்டபோது அந்த பைக் 140 கிமீ வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. எனவே, இந்த பைக் 150 கிமீ முதல் 160கிமீ வரையிலான வேகத்தில் செல்லத்தக்கதாக இருக்கும்.

காரில் சென்றுகொண்டிருந்தபோது அந்த பைக்கை சில கோணங்களில் படம் பிடித்துள்ளனர். டூயல் ஹெட்லைட்டுகள், டூயல் எக்ஸ்சாஸ்ட் குழாய்கள் பொருத்தப்பட்டிருப்பதை ஸ்பைஷாட் படங்களில் காணலாம்.

அடுத்த சில மாதங்களில் இந்த புதிய பைக்கை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, November 24, 2014, 15:00 [IST]
English summary
The Mojo was seen in Ooty, a few months ago, and early this November, two were seen being tested on the Salem-Coimbatore highway. Not after long, the motorcycle was seen entering Bangalore, via NH 4.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+