கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட இருசக்கர வாகன பிராண்டுகள்!

By Saravana

ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையிலும், இன்டர்நெட்டில் அதிகம் தேடப்பட்ட விபரங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2014ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட இருசக்கர வாகன பிராண்டுகள் குறித்த விபரங்களை கூகுள் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இந்த பட்டியலில் சுவாரஸ்யம் என்னவெனில், நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமோ அல்லது அதன் ஒரு மாடல்கூட டாப் பட்டியலில் இல்லை. அப்படியெனில், இந்தியர்கள் அதிகம் தேடிய பைக் பிராண்டுகள் எவை என்ற ஆவல் பிறக்கிறதல்லவா!.. வாருங்கள் ஸ்லைடருக்கு செல்லலாம்.


பட்டியல்

பட்டியல்

கூகுள் நிறுவனம் வெளியிட்டிருக்கும் டாப்- 7 பட்டியலை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

7.கேடிஎம் டியூக் 390

7.கேடிஎம் டியூக் 390

2014ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய பைக் மாடல்களில் 7வது இடத்தில் இருக்கிறது கேடிஎம் டியூக் 390. டியூக் 200 பைக்கிற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக இந்த பைக் மாடல் மீதும் அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது.

6. ஹோண்டா சிபிஆர் 150ஆர்

6. ஹோண்டா சிபிஆர் 150ஆர்

கூகுள் வெளியிட்ட டாப்- 7 பட்டியலில் ஆறாவது இடத்தில், ஆரம்ப நிலை 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக் மாடலான ஹோண்டா சிபிஆர் 150ஆர் இடம்பெற்றிருக்கிறது. ஃபேர்டு வெர்ஷன் மாடலில் பட்ஜெட் விலையிலான சரியான மாடல். ரூ.1.36 லட்சம் ஆன்ரோடு விலையில் சென்னையில் கிடைக்கிறது.

 5.பஜாஜ் பல்சர்

5.பஜாஜ் பல்சர்

பஜாஜ் பல்சர் 5வது இடத்தில் உள்ளது. சிறந்த செயல்திறன், டிசைன், நம்பகத்தன்மை போன்றவற்றால், பஜாஜ் பல்சர் தொடர்ந்து தனது செக்மென்ட்டில் முன்னிலை வகித்து வருகிறது. பல்சர் வரிசையில் 135சிசி, 150சிசி, 180சிசி, 200சிசி மற்றும் 220சிசி மாடல்களில் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

4. டுகாட்டி

4. டுகாட்டி

இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட டாப் -7 பட்டியலில் 4வது இடத்தில் டுகாட்டி பைக் நிறுவனம் இடம்பெற்றிருக்கிறது. காருக்கு புகாட்டி, பைக்குக்கு டுகாட்டி என்பதை இந்த தேடல் பட்டியலும் உணர்த்துகிறது. இந்தியாவில் 8 பைக் மாடல்களை டுகாட்டி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

3.டிவிஎஸ் ஜுபிடர்

3.டிவிஎஸ் ஜுபிடர்

டிவிஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் மிகச்சிறந்த பங்களிப்பை கொண்டிருக்கிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட இருசக்கர வாகன மாடல்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் டிவிஎஸ் ஜுபிடர் பெற்றிருக்கிறது. சென்னையில் ரூ.56,600 ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

2.ஹோண்டா ஆக்டிவா

2.ஹோண்டா ஆக்டிவா

ஸ்கூட்டர் என்றாலே ஹோண்டா ஆக்டிவா என்று சொல்லுமளவுக்கு, இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் மிக முக்கிய இடத்தை வகித்து வரும் ஹோண்டா ஆக்டிவா இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிறது. ஹோண்டா ஆக்டிவா பிராண்டுக்கு வலு சேர்க்கும் விதத்தில் இந்த ஆண்டு 125சிசி மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதும் ஒரு முக்கிய காரணம்.

1. ராயல் என்ஃபீல்டு

1. ராயல் என்ஃபீல்டு

நாட்டின் பழமையான மோட்டார்சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு முதல் இடத்தில் இருக்கிறது. மேலும், நடப்பு ஆண்டில் மாதத்திற்கு மாதம் மிகச்சிறப்பான வளர்ச்சியை பெற்று வரும் அந்த நிறுவனத்திற்கு பிரகாசமான எதிர்காலம் ஏற்பட்டிருப்பதும், கூகுள் தேடல் பட்டியல் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 24, 2014, 11:56 [IST]
English summary

 Google has released India's most searched two wheeler brands in 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+