இந்தியாவில் விற்பனைக்கு வரும் இத்தாலியின் மோட்டோ மொரினி பைக்குகள்!
இந்தியாவில் மோட்டோ மொரினி பைக்குகள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இத்தாலியை சேர்ந்த மோட்டோ மொரினி நிறுவனம் உயர் ரக பைக் தயாரிப்பில் புகழ்பெற்றது.
இந்த நிலையில், இந்திய சந்தையில் உயர் ரக பைக்குகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதையடுத்து, மோட்டோ மொரினியும் களமிறங்க முடிவு செய்தது.

இதற்காக, மும்பையை சேர்ந்த பிரபல கஸ்டம் பைக் நிறுவனமான வர்தேஞ்சியுடன் கடந்த ஆண்டு மோட்டோ மொரினி கூட்டணி அமைத்தது.
இந்த கூட்டணியில் புதிய பைக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பைக் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் திருவிழாவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
இதுதவிர, மோட்டோ மொரினியின் கிரான்பாசோ மற்றும் ஸ்க்ராம்ப்ளர் ஆகிய இரண்டு பைக் மாடல்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இரண்டு பைக்குகளிலும் 1,187சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். கிரான்பாசோ பைக் சாகச ரகத்திலும், ஸ்க்ராம்ப்ளர் ஆல் டெர்ரெய்ன் பைக் மாடலாகவும் வடிவமைப்பு கொண்டது.
நாடு முழுவதும் விரைவில் புதிய ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் மையங்களை திறப்பதற்கும் இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








