ஆஜானுபாகுவான புதிய எம்வி அகஸ்ட்டா பைக் - படங்கள்!
பெர்ஃபார்மென்ஸ் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் புகழ்பெற்ற எம்வி அகஸ்ட்டா நிறுவனம் அடுத்ததாக புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்த மாதம் 3ந் தேதி இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற இருக்கும் இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் டிராக்ஸ்டெர் 800 ஆர்ஆர் என்ற புதிய மாடலை அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த புதிய எம்வி அகஸ்ட்டா பைக்கின் படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளன. ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட இந்த புதிய மோட்டார்சைக்கிளின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

குடும்பம்
எம்வி அகஸ்ட்டாவின் புருட்டல் 800 வரிசையில் புதிய மாடலாக இது வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றங்கள்
காஸ்ட் வீல்களுக்கு பதிலாக ஒயர் ஸ்போக்ஸ் கொண்ட வீல்கள், கேண்டி ரெட் என்ற வண்ணத்திலான ஃபோர்க்குகள், சிலிண்டர் ஹெட்டுகள் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன. சிவப்பு- வெள்ளை அல்லது சிவப்பு- கருப்பு வண்ணக் கலவையிலான ஸ்டீயரிங் டேம்பர் கொண்டதாக கிடைக்கும்.

எஞ்சின்
புருட்டல் 800 டிராக்ஸ்டெர் பைக்கின் மேம்படுத்தப்பட்ட 125 எச்பி பவர் கொண்ட எஞ்சின் இந்த புதிய மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வீடியோ
புதிய எம்வி அகஸ்ட்டா டிராஸ்டெர் 80ஆர்ஆர் பைக்கின் வீடியோவை காணலாம்.


Click it and Unblock the Notifications








