புதிய ஹீரோ கரிஷ்மா பைக்குகளின் விலை விபரம் வெளியானது
புதிய ஹீரோ கரிஷ்மா பைக் மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியுள்ளதுடன், விலை விபரமும் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட செமி ஃபேரிங் பேனல் கொண்ட கரிஷ்மா ஆர் மற்றும் முழுமையான ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட கரிஷ்மா இசட்எம்ஆர் ஆகிய இரு புதிய பைக்குகளுக்கும் பெரு நகரங்களில் உள்ள ஹீரோ டீலர்ஷிப்புகளில் முன்பதிவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
தோற்றத்தில் புதுப்பொலிவுடன், கூடுதல் திறன் கொண்டதாக மாற்றப்பட்ட எஞ்சினுடன் இந்த புதிய மாடல்கள் வந்துள்ளன. இந்த இரு புதிய பைக் மாடல்களுக்கும் விரைவில் டெலிவிரி துவங்கப்பட உள்ளது.

எஞ்சின் பவர்
முந்தைய கரிஷ்மா மாடல்களில் உயிர் கொடுத்த அதே 223சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், கூடுதல் பவரை அளிக்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. முந்தைய கரிஷ்மா பைக் மாடல்களின் எஞ்சின் 17.35 எச்பி பவரையும், 18.35 என்எம் டார்க்கையும் அளிக்கும் திறன் கொண்டவையாக இருந்தன. ஆனால், புதிய கரிஷ்மா மாடல்களின் எஞ்சின் 19 எச்பி பவரையும், 19.35 என்எம் டார்க்கையும் அளிக்கும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஃப்யூவல் இன்ஜெக்ஷன்
முழு ஃபேரிங் பேனல்கள் கொண்டதாக வெளியிடப்பட்டிருக்கும் புதிய கரிஷ்மா இசட்எம்ஆர் பைக் மாடலின் எஞ்சின் எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் வந்துள்ளது.

பெர்ஃபார்மென்ஸ்
புதிய கரிஷ்மா பைக் மாடல்கள் 0 -60 கிமீ வேகத்தை 3.6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 135 முதல் 140 கிமீ டாப் ஸ்பீடு கொண்டதாக இருக்கும்.

விலை விபரம்
2014 ஹீரோ கரிஷ்மா ஆர் - ரூ.91,320 (டெல்லி)
2014 ஹீரோ கரிஷ்மா ஆர் - ரூ. 93,119 (மும்பை)
2014 ஹீரோ கரிஷ்மா இசட்எம்ஆர் - ரூ.114,210 (டெல்லி)
2014 ஹீரோ கரிஷ்மா இசட்எம்ஆர் - ரூ.116,630 (மும்பை)


Click it and Unblock the Notifications








