ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கிற்கு முன்பதிவு துவக்கம்!
இந்தியாவில், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கிற்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
புதிய டிசைன் மற்றும் புதிய 160சிசி எஞ்சினுடன் இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது. குறிப்பாக, சிபி டிரிக்கர் பைக்கின் சில பாகங்கள் இந்த புதிய யூனிகார்ன் பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புதிய பெட்ரோல் டேங்க், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கின்றன. எல்இடி டெயில் லைட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பைக்கில் 14 எச்பி பவரை அளிக்கும் 160சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ரூ.63,695 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








