அட்டகாசமான ஸ்டைலில் பீஜோவின் புதிய ஸ்கூட்டர் அறிமுகம்!
சிறப்பான அம்சங்களுடன் புதிய பீஜோ ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான பீஜோ கார் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக திகழ்கிறது.
இந்த நிறுவனம், இருசக்கர வாகன மாடல்களையும் தயாரித்து வருகிறது. பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து மார்க்கெட்டுகளில் பீஜோவின் ஸ்கூட்டர்கள் பிரபலமாக விளங்குகின்றன. இந்த நிலையில், தனது ட்வீட் எவோ என்ற புதிய ஸ்கூட்டரை மேம்படுத்தி புதிய மாடலாக அறிமுகம் செய்துள்ளது.

டிசைன்
பழமையும், புதுமையும் கலந்ததாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதாவது, வெஸ்பாவின் பிரிமியம் ஸ்கூட்டர்களை போன்றே இதுவும் சற்று பிரிமியம் மாடலாகவே இருக்கிறது.

வண்ணங்கள்
வெள்ளை, சாம்பல் மற்றும் நீலம் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். பிரத்யே வண்ணத்திலும், தையல் வேலைப்பாடுகளுடன் இருக்கை கவர்கிறது.

சக்கரங்கள்
வெள்ளை நிற ட்வீட் எவோ ஸ்கூட்டர் கருப்பு நிற அலாய் வீல்களுடன் கிடைக்கும். மீதமுள்ள சாம்பல் மற்றும் நீல நிற ஸ்கூட்டர்களில் சில்வர் கலர் 16 இஞ்ச் அலாய் வீல்கள் கொண்டதாக இருக்கிறது.

இரு எஞ்சின் ஆப்ஷன்கள்
புதிய ட்வீட் எவோ ஸ்கூட்டர் 50சிசி மற்றும் 125சிசி எஞ்சின் கொண்ட இரு மாடல்களில் கிடைக்கும். 50சிசி ஸ்கூட்டர் இந்திய மதிப்பில் ரூ.1.81 லட்சம் விலையிலும், 125சிசி மாடல் ரூ.2.11 லட்சம் விலையிலும் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு அரிது
இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஜப்பானிய நிறுவனங்களின் கை ஓங்கி நிற்கிறது. ஐரோப்பிய பிராண்டான பியாஜியோவின் வெஸ்பா பிராண்டு குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை குறிவைத்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் பீஜோ ஸ்கூட்டர்கள் வருவதற்கான வாய்ப்பு அரிது. இருப்பினும், இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டின் வளர்ச்சி நிச்சயம் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதாகவே உள்ளதால் பீஜோவும் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Click it and Unblock the Notifications








