புதிய 400சிசி எஞ்சினை தயாரிக்கும் ராயல் என்ஃபீல்டு!
நாட்டின் பழம் பெருமை வாய்ந்த மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாடல்களுக்காக புதிய எஞ்சின்களை வடிவமைத்து வருகிறது. அதில், புதிய 400சிசி எஞ்சின் ஒன்றும் அடக்கம்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தற்போதைய என்ட்ரிலெவல் மாடல்களில் இருக்கும் 346சிசி எஞ்சினில் மாற்றங்களை செய்து இந்த புதிய 400சிசி எஞ்சினை உருவாக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதவிர, 500சிசி எஞ்சினில் மாற்றங்களை செய்து கூடுதல் திறன் கொண்ட எஞ்சின் தயாரிப்பிலும் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. புதிய 400சிசி எஞ்சின் பற்றிய சில கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய எஞ்சின்
தற்போதைய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களில் உயிர் கொடுத்து வரும் 346சிசி எஞ்சின் அடிப்படையிலேயே புதிய 400சிசி எஞ்சின் உருவாக்கப்பட்டு வருகிறது.

பவர்
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 346சிசி எஞ்சின் 20 எச்பி பவரையும், 499சிசி எஞ்சின் 28 எச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டவை. புதிய 400சிசி எஞ்சின் 22 எச்பி முதல் 25 எச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

விலை
புதிய 400சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் ரூ.1.30 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

4வது எஞ்சின்
346சிசி, 499சிசி மற்றும் கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிளில் இருக்கும் 535சிசி வரிசையில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 4வது எஞ்சினாக புதிய 400சிசி எஞ்சினை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்ய இருக்கிறது.


Click it and Unblock the Notifications








