ஜூன் விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட ராயல் என்ஃபீல்டு

By Saravana

இதுவரை இல்லாத அளவு விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டு அசத்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம்.

ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனமாக அங்கமாக செயல்படும் ராயல் என்ஃபீல்டு சென்னையில் இருசக்கர வாகன ஆலை அமைத்து மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்து வருகிறது.

Royal Enfield Sales

க்ரூஸர் ரகத்தில் மிகச்சிறப்பான மோட்டார்சைக்கிள்களை சரியான விலையில் விற்பனை செய்து வருவதால் இளைஞர்கள் மத்தியில் இந்த பிராண்டுக்கு தனி மதிப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் விற்பனையில் புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். ஆம், கடந்த மாதம் உள்நாடு மற்றும் ஏற்றுமதியை சேர்த்து 25,303 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 13,806 மோட்டார்சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்திருந்த அந்த நிறுவனத்தின் விற்பனை கடந்த மாதம் 83 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும், ராயல் என்ஃபீல்டு விற்பனை வரலாற்றிலேயே இதுதான் அதிகபட்ச விற்பனை எண்ணிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை, ஒரகடத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆலை மூலம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் உற்பத்தி திறன் வெகுவாக அதிகரித்துள்ளது.

இதுவும் விற்பனை அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆலையில் மாதத்திற்கு 10,000 மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது குறி்ப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 12, 2014, 9:53 [IST]
English summary

 Royal Enfield recently introduced new paint schemes and a new logo for its cruiser motorcycles. In the month of June the Indian based manufacturer has reported positive sales figures. They managed to sell 25,303 motorcycles in both domestic and export markets. They have grown by 83 percent compared to 13,806 motorcycles it sold in June, 2013.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+