புதிய 750சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு!!
புதிய திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகப்படுத்த ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது.
வாகன மார்க்கெட்டில் நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பத்துடன் வாகனங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதனால், கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், நாட்டின் பழமையான மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டும் வாகன சந்தைக்கு ஏற்ப புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
250சிசி முதல் 750சிசி வரை திறன் கொண்ட மாடல்களை அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால், புதிய 750சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மார்க்கெட்டில் முதலில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது.
ஏனெனில், அந்நாடுகளில் ஹார்லி டேவிட்சன், டிரையம்ஃப் போன்ற நிறுவனங்களின் பைக் மாடல்களை விட ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் குறைவான விலையில் இருப்பதால், நல்ல வரவேற்பு இருக்கிறது.
இதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் புதிய மாடல்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய மாடல்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்காக ரூ.600 கோடி வரை முதலீடு செய்வதற்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஐஷர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








