ஒரு மாதத்திற்குள் மோட்டார்சைக்கிள் டெலிவிரி... 600 கோடியை முதலீடு செய்யும் ராயல் என்ஃபீல்டு!
காத்திருப்பு காலத்தை குறைப்பதற்காக உற்பத்தியை வெகுவாக அதிகரிக்க ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, தமிழகத்தில் உள்ள 2 மோட்டார்சைக்கிள் ஆலைகளிலும் ரூ.600 கோடி வரை முதலீடு செய்ய ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஐஷர் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு திறக்கப்பட்ட ஒரகடம் ஆலையில் பெயிண்ட் ஷாப் மற்றும் மோட்டார்சைக்கிள் அசெம்பிளிங் பிரிவு செயல்பட்டு வருகிறது. இதுதவிர, மோட்டார்சைக்கிள் தயாரிப்புக்கான அனைத்து பிரிவுகளையும் இந்த ஆலையில் ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளில் புதிய முதலீடுகள் மூலம் தமிழகத்தில் உள்ள ஆலைகளின் உற்பத்தி திறன் வெகுவாக அதிகரிக்கப்படும். இதன்மூலம், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான காத்திருப்பு காலம் வெகுவாக குறையும்.
அதாவது, முன்பதிவு செய்த ஒரு மாதத்திற்குள் மோட்டார்சைக்கிளை டெலிவிரி கொடுக்கும் இலக்குடன் இந்த புதிய முதலீட்டு திட்டத்தை நிறைவேற்ற ராயல் என்ஃபீல்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








