சப்தத்தில் மட்டுமல்ல... விற்பனையிலும் அதிர வைக்கும் ராயல் என்ஃபீல்டு
கடந்த மாதம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் விற்பனை கணிசமாக உயர்ந்தது.
ஆட்டோமொபைல் ஆக்சஸெரீஸ் மீது 75 சதவீதம் தள்ளுபடி - விபரம்!
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 17,659 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த மாதம் 26,039 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோடபர் விற்பனையைவிட இந்த ஆண்டு அக்டோபர் விற்பனை 47 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதனால், உற்சாகத்தில் மிதக்கும் ராயல் என்ஃபீல்டு, வெளிநாட்டு சந்தைகளிலும் கால் பதிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது.
இத்தாலியில் நாளை முதல் 9ந் தேதி வரை நடைபெற உள்ள இஐசிஎம்ஏ சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் தனது தயாரிப்புகளை காட்சிக்கு வைக்க இருக்கிறது ராயல் என்ஃபீல்டு. மேலும், இங்கிலாந்தில் இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கும் மோட்டார்சைக்கிள் கண்காட்சியிலும் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களை காட்சிக்கு வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








