ராக்கெட் வேகத்தில் ராயல் என்ஃபீல்டு விற்பனை!
கடந்த சில மாதங்களாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் விற்பனை மிகச்சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. கடந்த மாதமும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் விற்பனை 65 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17,005 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்திருந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த மாதம் 28,020 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. உள்நாட்டை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் 16,542 மோட்டார்சைக்கிள்கள் என்றிருந்த விற்பனை கடந்த மாதம் 27,540 என்ற எண்ணிக்கையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.

புதிய ஆலை மோட்டார்சைக்கிள் உற்பத்தி திறன் கூடுதலாகியுள்ளதால், இந்த அசுர வளர்ச்சியை ராயல் என்ஃபீல்டு பெற்றிருக்கிறது. இதனால், அந்த நிறுவனம் பெரும் உற்சாகத்தில் இருக்கிறது. மேலும், சர்வதேச சந்தையிலும் விரிவாக்கப் பணிகளையும் துவங்கியிருக்கிறது.
தற்போது முதல்முறையாக ஜெர்மனியில் நடந்து வரும் இன்டர்மோட் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் தனது கான்டினென்டர் ஜிடி கஃபே ரேஸர் மோட்டார்சைக்கிள் மாடலை காட்சிக்கு வைத்திருக்கிறது. இதுதவிர, கிளாசிக் குரோம், கிளாசிக் பேட்டில் க்ரீன், கிளாசிக் டெசர்ட் ஸ்ட்ராம் மற்றும் புல்லட் 500 மோட்டார்சைக்கிள்களையும் பார்வைக்கு வைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications








