சென்னையில் 3வது ஆலையை அமைக்கும் ராயல் என்ஃபீல்டு!
சென்னையில் மூன்றாவதாக புதிய இருசக்கர வாகன தயாரிப்பு ஆலையை நிறுவுவதற்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஐஷர் வாகன தயாரிப்பு நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு சென்னை, திருவொற்றியூர் மற்றும் ஓரகடத்தில் இருசக்கர வாகன ஆலைகள் உள்ளன.

இந்தநிலையில், எதிர்கால தேவைகளை கருதியும், வெளிநாடுகளில் வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் வகையிலும், மூன்றாவதாக சென்னையில் ஓர் புதிய ஆலையை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, ஓரகடத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் வல்லம்- வடகல் என்ற இடத்தில் ரூ.57 கோடி மதிப்பில் புதிய இடத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வாங்கியுள்ளது.
தற்போது ஆண்டுக்கு 4 லட்சம் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், புதிய ஆலை செயல்பாட்டுக்கு வரும்போது ஆண்டுக்கு 6 லட்சம் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனை பெற்றுவிடும்.
இதன்மூலம், வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடையில்லாமல் மோட்டார்சைக்கிள்களை டெலிவிரி செய்யும் திறனை பெறும். இதுதவிர, அடுத்த ஆண்டுக்குள் டீலர்ஷிப் எண்ணிக்கையையும் 500 ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








