புதிய அதிவேக சாதனையை நிகழ்த்திய ராயல் என்ஃபீல்டு ஜிடி மோட்டார்சைக்கிள்!
அமெரிக்காவின் போனெவில் சால்ட் ஃப்ளாட்ஸ் பகுதியில் அவ்வப்போது வாகனங்களில் உலகின் அதிவேக சாதனை முயற்சிகள் நடப்பது வாடிக்கை.
இந்த முறை அப்படியொரு அதிவேக சாதனை முயற்சியில் நம் நாட்டு தயாரிப்பான ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிள் பங்கெடுத்ததுடன் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

பிரிவு
500 எம்பிபிஎஸ் என்ற பிரிவில் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிள் புதிய அதிவேக சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஆனால், இந்த சாதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிளுக்கு கிடைத்த கவுரவமாக பார்க்கப்படுகிறது.

மாற்றங்கள்
அதிவேக சாதனையை நிகழ்த்துவதற்கான ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிளின் எஞ்சினின் காம்சாஃப்ட், சிலிண்டர் ஹெட், த்ராட்டில் அமைப்பு, பிஸ்டன் மற்றும் புகைப்போக்கி குழாய் அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

பிரபல ட்யூனர்
பிரபல பைக் ரேஸரும், எஞ்சின் ட்யூனிங் செய்வதில் வல்லவரான மேட் கேப்ரி இந்த பைக்கின் எஞ்சினில் மாறுதல்களை செய்தார். இதன்மூலம், சாதாரண ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி பைக்கைவிட இது 60 பிஎஸ் பவரை கூடுதலாக வழங்கும் வகையில் மாற்றப்பட்டது.

சாதனை பெண்
நதீன் டி ஃப்ரெய்டாஸ் என்ற பெண் மோட்டார்சைக்கிளை ஓட்டி புதிய சாதனை படைத்தார்.

சாதனை வேகம்
மணிக்கு 157.2 கிமீ வேகத்தில் பறந்து இந்த புதிய அதிவேக சாதனையை நதீன் படைத்தாக மேட் கேப்ரி குழுவினர் தெரிவித்தனர்.
Source: Royal Enfield


Click it and Unblock the Notifications








