ரூ.8,000 மாதத் தவணையில் ஹார்லி 750 பைக்: வாய்ப்பை நழுவவிடாதீர்!

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்குக்கான சிறப்பு கடன் திட்டங்களை எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் வழங்குகின்றன. கடந்த 2010ம் ஆண்டு முதல் இந்த இரு வங்கிகளுடன் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட குறைவான விலை கொண்ட ஸ்ட்ரீட் 750 பைக்குக்கும் இந்த இரு வங்கிகளும் சிறப்பு கடன் திட்டத்தை அறிவித்துள்ளன. அதுபற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கடன் திட்டம்

கடன் திட்டம்

ரூ.91,471 முன்பணமாக செலுத்த வேண்டும். ரூ.8,309 மாதத் தவணையை 5 ஆண்டுகளில் செலுத்தும் விதத்தில் இந்த சிறப்பு கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 பிராசஸிங் பீஸ்

பிராசஸிங் பீஸ்

எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளின் கடன் திட்டத்தை தேர்வு செய்யும் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் வாடிக்கையாளர்களுக்கு பிராசஸிங் பீஸ் எனப்படும் நடைமுறைச் செலவையும் தள்ளுபடி செய்து தருவதாக இரு வங்கிகளும் தெரிவித்துள்ளன.

கூடுதல் நிதி உதவி

கூடுதல் நிதி உதவி

ஸ்ட்ரீட் 750 பைக்கை கஸ்டமைஸ் செய்து கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு தனியாக ரூ.50,000 கடன் வழங்குவதாகவும் எச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது. ஹார்லியின் பிற மாடல்களுக்கு ரூ.2 லட்சம் வரை இந்த கூடுதல் கடனை வழங்குவதாகவும் எச்டிஎஃப்சி கூறுகிறது.

ஆக்சஸெரீஸ்

ஆக்சஸெரீஸ்

மொத்தம் 57 கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் ஸ்ட்ரீட் 750 பைக்குக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஹேண்டில்பார், பின்புற டயர் ஆகியவை மிக முக்கியமானதாக இருக்கின்றன.

 விலை

விலை

ரூ.4.10 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் ஸ்ட்ரீட் 750 பைக் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.5 லட்சத்திற்குள் ஆன்ரோடு விலை கொண்ட பைக்காக இருக்கிறது.

முன்பதிவு

முன்பதிவு

மார்ச் 1ஆம் தேதி முதல் இந்த புதிய பைக்குக்கு முன்பதிவு துவங்குகிறது. முதன்முதலாக இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய பைக் விரைவில் சர்வதேச அளவில் பல நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 20, 2014, 16:29 [IST]
English summary
Bikers who have booked the Street 750 from Harley Davidson, will receive their cruisers in March. However, the surprise is people who have opted for loans from HDFC or ICICI bank will have their processing fees waived off.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+