சுஸுகி லெட்ஸ் 110சிசி ஸ்கூட்டருக்கு முன்பதிவு துவங்கியது!
கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட சுஸுகி லெட்ஸ் ஸ்கூட்டருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
ஆக்செஸ் மற்றும் ஸ்விஷ் என்ற இரண்டு 125சிசி ஸ்கூட்டர்களை சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் ஆக்டிவா, யமஹா ரே உள்ளிடட் ஸ்கூட்டர்களை மாடல்களுக்கு நேரடியாக போட்டி கொடுக்கும் வகையில், இந்த புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வருகிறது.

இந்த புதிய ஸ்கூட்டரில் 110சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 100 கிலோ எடை கொண்ட இந்த புதிய ஸ்கூட்டர் லிட்டருக்கு 63 கிமீ மைலேஜ் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் சிங்கிள் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டிருக்கிறது. டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இருக்காது. இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








