சுஸுகி ஜிக்ஸெருக்கு முன்பதிவு ஆரம்பம்... சிறப்பம்சங்கள் விபரம்!
சுஸுகி ஜிக்ஸெர் 150சிசி பைக்குக்கு டீலர்ஷிப்புகளில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. 150சிசி மார்க்கெட்டில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும் இந்த புத்தம் புதிய பைக்கிற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று சுஸுகி நம்பிக்கை வைத்துள்ளது.
இதன் செக்மென்ட்டிலேயே அதிக மைலேஜ் தரும் பைக்காகவும் இது இருக்கும் என்று சுஸுகி தெரிவித்துள்ளதால், வாடிக்கையாளர்களிடமும் ஆவல் இருந்து வருகிறது. முன்பதிவு செய்ய விரும்புபவர்களுக்கு ஏதுவாக இந்த புதிய பைக்கின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.

சவாலான விலை
பஜாஜ் பல்சர், ஹோண்டா சிபி டிரிக்கர் உள்ளிட்ட 150சிசி பைக் மாடல்களுக்கு போட்டியாக வரும் இந்த புதிய சுஸுகி பைக் ரூ.80,000 விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் இந்த பைக் போட்டியாளர்களைவிட விலை குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மோனோ ஷாக்அப்சார்பர்
பின்புறத்தில் மோனோ ஷாக்அப்சார்பரும், டியூப் லெஸ் டயரும் கொண்டிருக்கிறது. பின்புற டயரின் அளவும் யமஹா எஃப்இசட் பைக்கை ஒத்ததாக இருக்கிறது.

புகைப்போக்கி குழாய்
இருக்கை, பைக்கின் பின்புற டிசைன் ஆகியவை வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும். புகைப்போக்கி குழாய் இரட்டை மஃப்ளர்களுடன் கூடிய கேன் டைப் கொண்டது. இது பைக்கின் தோற்றத்துக்கு கூடுதல் மிடுக்கை தரும்.

சிறப்பு பாதுகாப்பு வசதி
கியர் நியூட்ரலில் இருந்தாலும், கிளட்ச் லிவரை சிறிது பிடித்தால்தான் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியும். அதாவது, ஸ்கூட்டியில் பிரேக் லிவரை பிடித்துக் கொண்டு ஸ்டார்ட் செய்வது போன்று இதனை ஸ்டார்ட் செய்ய வேண்டுமாம். இதன்மூலம், குழந்தைகள் அல்லது சிறியவர்கள் எஞ்சினை எளிதாக ஸ்டார்ட் செய்வதை தவிர்க்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

டிஜிட்டல் கிளஸ்ட்டர்
ஹயபுசா பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் டிசைனை பல விதங்களில் ஜிக்ஸெர் பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் ஒத்திருக்கிறது. முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டராக இருக்கும்.

எஞ்சின்
இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 155சிசி எஞ்சின் 13.9 பிஎஸ் பவரையும், 13.4 என்எம் டார்க்கையும் அளிக்கும் விதத்தில் இருக்கும். தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஜிஎஸ்150ஆர் பைக்கை போன்றே 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வருகிறது. ஆற்றல் விரயத்தை தவிர்க்கும் ஈக்கோ பெர்ஃபார்மென்ஸ் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால், அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என சுஸுகி தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications








