சுஸுகி இந்தியா இணையதளத்தில் காணாமல் போன இனசுமா!

By Saravana

சுஸுகி இந்தியா நிறுவனத்தின இணையப்பக்கத்தில் இருந்து இனசுமா பைக் நீக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு துவக்கத்தில் சுஸுகி இனசுமா நேக்டு ஸ்டைல் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 248சிசி பேரலல் ட்வின் எஞ்சின் கொண்ட இந்த பைக் ரூ.3.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்தது.

Suzuki Inazuma

போட்டி மாடல்களுடன் ஒப்பிடுகையில், விலை மிக அதிகமாக இருந்ததால், வாடிக்கையாளர்களிடத்தில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் இந்த பைக்கின் விலையை அதிரடியாக ரூ.1 லட்சம் வரை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் குறைத்தது.

ஆயினும் பயனில்லை. இந்த நிலையில், சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் இருந்து இந்த பைக் விபரங்கள் நீக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை ஏதும் இல்லாததால், இந்த பைக் விற்பனையில் இருந்து விலக்கப்படுமா என்பது குறித்து உறுதியான தகவலை கூற முடியவில்லை.

இதனிடையே, சுஸுகி ஜிக்ஸெர் பைக் நல்ல விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருவது சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்துக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 22, 2014, 8:58 [IST]
English summary
We now believe the Japanese manufacturer has lost hope in their project. They have removed the Inazuma from their official India website. Currently the Gixxer motorcycle has witnessed decent sales, along with their Let's scooter.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+