வரும் 9ந் தேதி விற்பனைக்கு வருகிறது புதிய சுஸுகி ஜிக்ஸெர்
இன்னும் மூன்று நாட்களில் சுஸுகி ஜிக்ஸெர் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய பைக் மாடலின் விலை உள்ளிட்ட விபரங்களை சுஸுகி ஏற்கனவே வெளியிட்டு விட்டது.
இந்த நிலையில், மார்க்கெட்டுக்கு முறைப்படி விற்பனைக்கு வருவதற்கான தேதியை சுஸுகி உறுதிப்படுத்தியுள்ளது. இந்த புதிய பைக் 5 விதமான வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த புதிய பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 155சிசி எஞ்சின் 13.9 பிஎஸ் பவரையும், 13.4 என்எம் டார்க்கையும் அளிக்கும் விதத்தில் இருக்கும். தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஜிஎஸ்150ஆர் பைக்கை போன்றே 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வருகிறது.
ஆற்றல் விரயத்தை தவிர்க்கும் ஈக்கோ பெர்ஃபார்மென்ஸ் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால், அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என சுஸுகி தெரிவிக்கிறது. ரூ.84,383 மும்பை ஆன்ரோடு விலையில் இந்த பைக் கிடைக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








