ஆகஸ்ட் 10ல் விற்பனைக்கு வருகிறது புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக்!
அடுத்த மாதம் 10ந் தேதி புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய பைக் மாடல் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை தூண்டியிருக்கிறது.
150சிசி பைக் மார்க்கெட்டில் சற்று பிரிமியம் அம்சங்கள் கொண்ட மாடலாக நிலைநிறுத்தப்பட உளளது. கவர்ச்சியான தோற்றம் கொண்ட இந்த புதிய பைக் மாடல் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் அம்சங்களை கொண்டுள்ளது.

சுஸுகி ஜிக்ஸெர்
போட்டி மிகுந்த 150சிசி மார்க்கெட்டில் இரண்டாவது மாடலாக புதிய ஜிக்ஸெர் பைக்கை சுஸுகி களமிறக்க உள்ளது. கூடுதல் தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

தோற்றம்
டியூவல் மஃப்ளர் கொண்ட கேன் வடிவ எக்ஸ்சாஸ்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்ட்டர், கவர்ச்சியான ஹெட்லைட் அமைப்பு, முறுக்கேறிய டிசைனிலான பெட்ரோல் டேங்க் என மிக அசத்தலான டிசைன் அம்சங்களை கொண்டுள்ளது.

எஞ்சின்
இந்த புதிய சுஸுகி பைக்கில் 155சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 13.9 பிஎஸ் பவரையும், 13.4 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. மேலும், சுஸுகியின் ஈக்கோ பெர்ஃபார்மென்ஸ் கொண்ட எஞ்சின் சிறந்த மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு
இந்த புதிய பைக் மாடலுக்கு நாடு முழுவதும் உள்ள சுஸுகி டீலர்களில் தற்போது முன்பதிவு நடந்து வருகிறது. அடுத்த மாதம் 10ந் தேதி முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டவுடன் டெலிவிரியும் துவங்கப்படும்.

எதிர்பார்க்கும் விலை
ரூ.70,000 முதல் ரூ.80,000 வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மிக சவாலான விலை கொண்ட மாடலாக வருகிறது.


Click it and Unblock the Notifications








