மேம்படுத்தப்பட்ட சுஸுகி ஹயாட்டே பைக் விற்பனைக்கு வந்தது
வாடிக்கையாளர்களை கவரும் வகையில், கூடுதல் அம்சங்களுடன் புதிய சுஸுகி ஹயாட்டே பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய சுஸுகி ஹயாட்டே பைக் தற்போது கலக்கலான பாடி கிராஃபிக்ஸ் கொண்டதாக 5 புதிய வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

மேலும், ஹயாட்டே பைக்கில் புதிய 112சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது அதிக எரிபொருள் சிக்கனத்தையும், மென்மையான ஓட்டுதல் சுகத்தையும் வழங்கும் என சுஸுகி தெரிவிக்கிறது.
இதுதவிர, மெயின்டெனன்ஸ் ஃப்ரீ பேட்டரி, ட்யூப்லெஸ் டயர்கள் மற்றும் கூடுதல் அகலம் கொண்ட ரிம்களுடன் வந்துள்ளது. புதிய சுஸுகி ஹயாட்டே பைக் ரூ.44,969 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








