சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் முக்கிய அம்சங்களின் விபரம் வெளியானது
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட சுஸுகி நிறுவனத்தின் புத்தம் புதிய ஜிக்ஸெர் பைக்கின் எஞ்சின் விபரங்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய பைக் மாடல் வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய பைக் பல்வேறு சிறப்பம்சங்களை தாங்கி வருகிறது.
எனவே, இந்த புதிய பைக்கின் மீது வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. மற்றொரு பக்கத்தில் இந்த புதிய பைக் மூலம் பைக் மார்க்கெட்டில் தனக்கு உரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று சுஸுகியும் பெரும் நம்பிக்கையில் காத்திருக்கிறது. கூடுதலாக பல விபரங்களை ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.

செக்மென்ட்
155சிசி எஞ்சினுடன் வரும் இந்த புதிய பைக் மாடல்150சிசி மார்க்கெட்டிலயே சற்று பிரிமியம் பைக்காக நிலைநிறுத்தப்பட உள்ளது. ஹோண்டா சிபி டிரிக்கர், யமஹா எஃப்இசட்16 ஆகிய பைக் மாடல்களுடன் நேரடியாக போட்டி போடும். விற்பனையில் முன்னிலை வகிக்கும் பஜாஜ் பல்சர் 150 பைக்குக்கும் போட்டி கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

எஞ்சின் விபரம்
இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 155சிசி எஞ்சின் 13.9 பிஎஸ் பவரையும், 13.4 என்எம் டார்க்கையும் அளிக்கும் விதத்தில் இருக்கும். தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஜிஎஸ்150ஆர் பைக்கை போன்றே 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வருகிறது. ஆற்றல் விரயத்தை தவிர்க்கும் ஈக்கோ பெர்ஃபார்மென்ஸ் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால், அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என சுஸுகி தெரிவிக்கிறது.

டிஜிட்டல் கிளஸ்ட்டர்
ஹயபுசா பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் டிசைனை பல விதங்களில் ஜிக்ஸெர் பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் ஒத்திருக்கிறது. முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டராக இருக்கும்.

இது புதுசு
கியர் நியூட்ரலில் இருந்தாலும், கிளட்ச் லிவரை சிறிது பிடித்தால்தான் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியும். அதாவது, ஸ்கூட்டியில் பிரேக் லிவரை பிடித்துக் கொண்டு ஸ்டார்ட் செய்வது போன்று இதனை ஸ்டார்ட் செய்ய வேண்டுமாம். இதன்மூலம், குழந்தைகள் அல்லது சிறியவர்கள் எஞ்சினை எளிதாக ஸ்டார்ட் செய்வதை தவிர்க்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சேஸீ டிசைன்
ஜிஎஸ்எக்ஸ் ஆர் 1000சிசி பைக்கை உருவாக்கிய அதே எஞ்சினியர் குழுதான் இந்த பைக்கின் ஃப்ரேமை வடிவமைத்துள்ளனர்.

மோனோ ஷாக்அப்சார்பர்
பின்புறத்தில் மோனோ ஷாக்அப்சார்பரும், டியூப் லெஸ் டயரும் கொண்டிருக்கிறது. பின்புற டயரின் அளவும் யமஹா எஃப்இசட் பைக்கை ஒத்ததாக இருக்கிறது.

புகைப்போக்கி குழாய்
இருக்கை, பைக்கின் பின்புற டிசைன் ஆகியவை வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும். புகைப்போக்கி குழாய் இரட்டை மஃப்ளர்களுடன் கூடிய கேன் டைப் கொண்டது. இது பைக்கின் தோற்றத்துக்கு கூடுதல் மிடுக்கை தரும்.

முகப்பு
முகப்புத் தோற்றம், குறிப்பாக ஹெட்லைட் டிசைன் பல்சர் 200என்எஸ் பைக்கை நினைவூட்டுகிறது.

விலை குறைவாக இருக்கும்
ரூ.80,000 விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுஸுகி ஜிக்ஸெர் சிறப்பான தோற்றத்தை கொண்டிருப்பதால் போட்டியாளர்களுக்கு நிச்சயம் போட்டியை கொடுக்கும். மேலும், போட்டியாளர்களைவிட விலை குறைவாக இருக்குமாம்.


Click it and Unblock the Notifications








