இனசுமா 250சிசி பைக்கின் விலையை ரூ.1 லட்சம் குறைக்க சுஸுகி முடிவு!

By Saravana

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட சுஸுகி இனசுமா பைக்கின் விலை ரூ.1 லட்சம் வரை குறைக்கப்பட உள்ளது.

ரூ.3.10 லட்சம் விலையில் ட்வின் சிலிண்டர் எஞ்சின் கொண்ட சுஸுகி இனசுமா விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போதே, விலை அதிகம் நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாக விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், சுஸுகி இனசுமா விலையை குறைக்க சுஸுகி முடிவு செய்துள்ளது.


 ஒரு லட்சம் குறையும்

ஒரு லட்சம் குறையும்

சமீபத்தில் வாகன உற்பத்தி வரி குறைக்கப்பட்டதையடுத்து, சுஸுகி இனசுமா பைக்கின் விலையை கணிசமாக குறைக்க சுஸுகி முடிவு செய்துள்ளது. ஆனால், மாநிலத்துக்கு மாநிலம் வாகனங்களின் மீதான வரி விதி முறையில் பல வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும், அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை இனசுமா விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடும் போட்டி

கடும் போட்டி

ட்வின் சிலிண்டர் எஞ்சின் கொண்ட சுஸுகி இனசுமா பைக்கின் விலை குறைக்கப்பட்டால், அது ஹோண்டா சிபிஆர் 250ஆர், கேடிஎம் டியூக் 200 போன்ற பைக் மாடல்களுக்கு கடும் போட்டியை கொடுக்கலாம். ஏனெனில், பணத்திற்கு சிறந்த மதிப்பு கொண்ட மாடலாக சுஸுகி இனசுமா இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

சுஸுகி இனசுமா பைக்கில் 26 பிஎச்பி சக்தியையும், 24.2 என்எம் டார்க்கையும் அளிக்கும் ட்வின் சிலிண்டர் கொண்ட 248சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

எடை

எடை

இந்த பைக் 183 கிலோ எடை கொண்டது. இந்த பைக்கில் 13.3 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

 பொதுவான அம்சங்கள்

பொதுவான அம்சங்கள்

கட்டுறுதியான ப்ரேம், ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக், அதிக தரத்துடன் கூடிய கட்டுமானம் ஆகியவை பாதுகாப்பான டிரைவிங் அனுபவத்தை வழங்கும். இதன் வடிவமைப்பும் மற்ற ஸ்போர்ட்ஸ் பைக்குகளிலிருந்து மாறுபட்டிருப்பதால் தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது.

வாம்மா மின்னலு

வாம்மா மின்னலு

இனசுமா என்பதற்கு ஜப்பானிய மொழியில் மின்னல் என்று அர்த்தமாம்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.3,10,121 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், ரூ.2,35,000 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, June 16, 2014, 11:14 [IST]
English summary
The Japanese manufacturer Suzuki will be reducing the price of its Inazuma by INR 1,00,000. The price will vary from location to location as every state has its separate tax structure and percentage it charges. A recent decrease in excise duty is the major factor in the price deduction.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+