ஹயபுசா சூப்பர் பைக்குக்கு விடை கொடுக்க சுஸுகி முடிவு!
சுஸுகியின் நட்சத்திர அந்தஸ்து கொண்ட சூப்பர் பைக் மாடல் ஹயபுசா. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட பைக் மாடலும் கூட. உலகின் அதிவேக பைக்குகள் லிஸ்ட்டை தயார் செய்யும்போது ஹயபுசாவும் அதில் இடம்பிடித்துவிடும்.
அறிமுகம் செய்யப்பட்டு 15 ஆண்டுகளை தாண்டிய நிலையிலும், இந்த பைக்கிற்கான ரசிக பட்டாளம் குறைந்தபாடில்லை. வித்தியாசமான டிசைன், சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்ட எஞ்சின் என ஹயபுசா இதுவரை சோடை போகாமல் தனது இடத்தில் கெட்டியா இருந்து வருகிறது.

இந்த பைக்கில் புதுமைகளை கொடுக்கிறோம் என்று சுஸுகி இதுவரை அதிகப்படியாக கைவைத்தைதும் இல்லை. 2007ம் ஆண்டிலிருந்து பார்க்கப்போனால் இந்த பைக்கில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஏபிஎஸ் மற்றும் பிரெம்போ பிரேக் காலிபர்கள் கொடுக்கப்பட்டதுதான் குறிப்பிடத்தக்க மாற்றமாக கூறலாம்.
மேலும், 1999ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை தொடர்ந்து அதே 1,300 எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஹயபுசாவுக்கு மாற்றாக புதிய மாடலை அறிமுகப்படுத்த சுஸுகி முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு அல்லது 2016ம் ஆண்டில் ஹயபுசாவுக்கு மாற்றாக புதிய மாடல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








