விற்பனைக்கு முன்னரே ஜிக்ஸெரின் முழு விபரங்களை வெளியிட்ட சுஸுகி!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய சுஸுகி ஜிக்ஸெர் 150 பைக்கின் விலை உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்தியர்களுக்கு தரிசனம் கொடுத்த சுஸுகி ஜிக்ஸெர் 150 பைக்கை பற்றிய விபரங்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. இந்த நிலையில், விற்பனைக்கு முறைப்படி அறிமுகம் செய்வதற்கு முன்னதாகவே தற்போது விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை சுஸுகி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை காணலாம்.

எஞ்சின்
இந்த புதிய பைக்கில் 154.9சிசி 4 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 14.59 எச்பி பவரையும், 14 என்எம் டார்க்கையும் வழங்கும். ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் இருக்காது. கார்புரேட்டர் கொண்ட எஞ்சின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

வண்ணங்கள்
5 விதமான வண்ணங்களில் கிடைக்கும். அதில், ஊர்ட் கிரே மற்று்ம் டிரைட்டான் புளூ ஆகியவை மெட்டாலிக் வண்ணங்களில் கிடைக்கும். கேண்டி ஆன்டேர்ஸ் ரெட், கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் மற்றும் பியர்ல் மிராஜ் ஒயிட் ஆகிய பிற வண்ணங்களிலும் வருகிறது.

விலை
சென்னையில் ரூ.82,458 ஆன்ரோடு விலையில் கிடைக்கும் சுஸுகி அறிவித்துள்ளது. சிறப்பான டிசைனுடன், கூடுதல் சிறப்பம்சங்களுடன் சரியான விலையில் வரும் இந்த புதிய பைக் போட்டியாளர்களுக்கு மிக கடுமையான நெருக்கடியை தரும் என எதிர்பார்க்கலாம்.

முன்பதிவு செய்ய...
இந்த புதிய சுஸுகி பைக்கிற்கு ஏற்கனவே முன்பதிவு நடந்து வருகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யவும், தமிழக நகரங்கள் உள்பட அனைத்து மாநிலங்களில் இந்த புதிய பைக்கின் ஆன்ரோடு விலையை தெரிந்துகொள்ளவும் இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








