இந்திய பைக் வீக் திருவிழா: டீம் டிரைவ்ஸ்பார்க் பயண ஆல்பம்

கோவாவில் இந்திய பைக் வீக் திருவிழா இன்று துவங்குகிறது. இதில், கலந்து கொள்வதற்காக டிரைவ்ஸ்பார்க் டீம் எடிட்டர்கள் பைக்கில் பயணித்து கோவா சென்றுள்ளனர். கடந்த 14ந் தேதி பெங்களூரிலிருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்ட எமது டீம் இரவு 11 மணியளவில் கோவா சென்றடைந்தனர்.

பெங்களூரிலிருந்து பாகாபூர், யெல்லாபூர், அல்நவார் வழித் தடத்தில் அவர்கள் கோவா சென்றனர். பல்சர் 220 மற்றும் யமஹா எஃப்இசட் பைக்குகளில் அவர்கள் பயணித்தனர். ஜோபோ குருவில்லா யமஹா எஃப்இசட் பைக்கிலும், கணேஷ் ஆச்சார்யா மற்றும் நண்பர் கோபால் ஆகியோவர் பல்சர் 220 பைக்கிலும் பயணித்துள்ளனர். பெங்களூரிலிருந்து சுமார் 18 மணி நேர பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், கூடுதல் தகவல்களையும் இங்கே ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.

 சவால்

சவால்

முதல் 5 மணி நேரத்தில் 300 கிமீ வரை எந்த பிரச்னையும் இல்லாமல் எளிதாக கடந்துள்ளனர். ஆனால், அதன்பிறகான மோசமான சாலையால் மீதமுள்ள 350 கிமீ தூரத்தை 12 மணிநேரம் வரை எடுத்துக் கொண்டதாக தெரிவித்தனர்.

எசவந்தபுரம், தாஜ் விவாண்டா ஓட்டல் எதிரில் புறப்பட தயாராக இருந்த யமஹா எஃப்இசட்.

அடிக்கடி பிரேக்

அடிக்கடி பிரேக்

மிக மோசமான சாலைகளால் இரண்டாவது பாதியில் அடிக்கடி ஓய்வு எடுக்க நேரிட்டதாகவும், 3 முறை பெட்ரோல் நிரப்புவதற்காக நிறுத்தியதாகவும் தெரிவித்தனர்.

பல்சர் பெர்ஃபார்மென்ஸ்

பல்சர் பெர்ஃபார்மென்ஸ்

நெடுஞ்சாலையில் செல்வதற்கும், ஒட்டுமொத்த பயணத்திலும் பல்சர் 220 மிகச்சிறப்பாக இருந்தாக எமது குழுவினர் தெரிவித்தனர். உச்சமாக 125 கிமீ வேகம் வரை எந்த பிரச்னையும் இல்லாமல் செல்வதாக தெரிவித்தர்.

பல்சர் மைலேஜ்

பல்சர் மைலேஜ்

இருவர் பயணித்த பல்சர் 220 பைக் மிகச் சிறப்பான பெர்ஃபார்மென்ஸையும், மைலைஜையும் வழங்கியதாக ஜோபோ குருவில்லா தெரிவித்தார். மேலும், இரண்டு பேக் பேக்குகளையும் சேர்த்து அதிக பொதியை சுமந்து சென்றாலும், சராசரியாக லிட்டருக்கு 38 கிமீ வரை மைலேஜ் கொடுத்ததாகவும், ஒரு ஃபுல் டேங்க் பெட்ரோலில் (18லிட்டர்) கோவா சென்றடைந்துவிட்டதாகவும் கூறினார்.

யமஹா எஃப்இசட்

யமஹா எஃப்இசட்

யமஹா எஃப்இசட் பைக்கின் ரோடு கிரிப் மிக அருமையாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், ஹேண்டில்பாரின் பொசிஷன் நெடுஞ்சாலையில் ஓட்டிச் செல்வதற்கு மிக சிறப்பாகவும், லாவகமாகவும் இருப்பதால் சோர்வு தெரியவில்லை என்றும் ஜோபோ கூறினார்.

மைலேஜ்

மைலேஜ்

இது 150சிசி பைக் என்பதால் பெர்ஃபார்மென்சில் பல்சர் 220யுடன் ஒப்பிட இயலாது என்றாலும் நெடுஞ்சாலையில் 100 கிமீ வரை மிகச் சிறப்பாக செல்கிறது. அதற்கு மேல் வேகமெடுக்கும்போது அதிர்வுகள் அதிகம் தெரிவதாக கூறியுள்ளனர்.

எஃப்இசட்டுக்கு அடிக்கடி தாகம்

எஃப்இசட்டுக்கு அடிக்கடி தாகம்

யமஹா எஃப்இசட் பைக் சராசரியாக லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் கொடுத்ததாக தெரிவித்தனர். மேலும், இதன் பெட்ரோல் டேங்க் அதிகபட்ச கொள்ளளவு 12 லிட்டர் என்பதால் 3 முறை பெட்ரோல் போடுவதற்கு நிறுத்த வேண்டியிருந்ததாகவும் குறிப்பிட்டனர்.

பயணம்

பயணம்

பாகாபூர் வரையிலான முதல் 300 கிமீ வரை ஒரே நேரான நெடுஞ்சாலை என்பதால் மிகவும் போரடித்துவிட்டதாக கணேஷ் தெரிவித்தார். இதன்பின், சுங்க சாலையை தவிர்த்து யெல்லாபூர் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பயணம் தொடர்ந்தது. பாகாபூரில் சாலை வேலை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

வனச்சாலை

வனச்சாலை

யெல்லாபூரிலிருந்து ஆல்நவார் வரையிலான வனப் பகுதி சாலை த்ரில்லாக இருந்ததாகவும், அதேவேளை சாலையில் எக்கச்சக்க மேடுபள்ளங்கள் காரணமாக பெரும் சிரமத்தை கொடுத்ததாகவும் தெரிவித்தார். அதேவேளை, பெங்களூரிலிருந்து கோவா செல்ல விரும்பும் பைக் பிரியர்கள் பாகாபூர், டெல்லாபூர், அல்நவார், மொலேம் வழியிலான இந்த சாலையை நிச்சயம் முயற்சிக்கலாம் என்றார். அது சிறப்பான அனுபவமாக அமையும் என்று தெரிவித்தார்.

கவரேஜ்

கவரேஜ்

கடந்த இரு நாட்களாக ஓய்வு எடுத்து புத்துணர்ச்சி பெற்றிருக்கும் எமது எடிட்டர்கள் இன்று முதல் இந்திய பைக் வீக் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை வழங்க உள்ளனர்.

கோவா கடற்கரை

கோவா கடற்கரை

தெற்கு கோவா கடற்கரையை நெருங்கியபோது சூரிய அஸ்தமனத்தின்போது எடுத்த படம்.

டீம் டிரைவ்ஸ்பார்க் கோவா பயணம்

தெற்கு கோவா கடற்கரையை நெருங்கியபோது சூரிய அஸ்தமனத்தின்போது எடுத்த படம்.

More from DriveSpark

Article Published On: Friday, January 17, 2014, 10:57 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+