ரூ.250 கோடி கொடுத்து டைகர் வுட்சை விளம்பர தூதராக்கிய ஹீரோ!
ரூ.250 கோடி சம்பளத்தில் பிரபல விளையாட்டு வீரர் டைகர் வுட்சை சர்வதேச விளம்பர தூதராக நியமித்திருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்.
சர்வதேச அளவில் வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மிக தீவிரமாக மேற்கொண்டுள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். இதற்காக, உலக அளவில் பிரபலமான கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் வுட்சை விளம்பர தூதராக நியமித்துள்ளது.

அமெரிக்காவின் ஆர்லாண்டோவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் டைகர் வுட்சை சர்வதேச விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருப்பதை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் துணைத் தலைவர் பவன் முஞ்சால் அறிவித்தார்.
அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சர்வதேச விளம்பர தூதராக டைகர் வுட்ஸ் செயல்படுவார். இதற்காக ரூ.250 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








