விற்பனையில் சாதித்த இந்தியாவின் டாப்- 10 டூ- வீலர்கள்!
இந்திய இருசக்கர வாகன மார்க்கெட்டில் மோட்டார்சைக்கிள்களுக்கும், ஸ்கூட்டர்களுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. தேசத்தின் வண்டியாக குறிப்பிடப்படும் ஹீரோ ஸ்பிளென்டரை விற்பனையில் ஓரம் கட்டும் அளவுக்கு விற்பனையில் முன்னேறி வருகிறது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்.
கார் மார்க்கெட் மந்தகதியில் இருந்தாலும், இருசக்கர வாகன மார்க்கெட் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த நிதி ஆண்டில் இந்திய இருசக்கர வாகன மார்க்கெட்டில் சாதித்த டாப்- 10 இருசக்கர வாகனங்களை ஸ்லைடரில் காணலாம்.

1. ஹீரோ ஸ்பிளென்டர்
கடந்த நிதி ஆண்டில் டாப்- 10 பட்டியலின் முதலிடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் பைக் ஹீரோ ஸ்பிளென்டர்தான். கடந்த நிதி ஆண்டில் 19,67,006 ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. ஆனால், அதற்கு முந்தைய நிதி ஆண்டைவிட இது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

2. ஹோண்டா ஆக்டிவா
நம்பர்- 1 இடத்தை நோக்கி பெரும் விற்பனை வளர்ச்சியுடன் முன்னேறி வருகிறது ஹோண்டா ஆக்டிவா. கடந்த நிதி ஆண்டில் மொத்தம் 16,74,178 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகின. கடந்த ஆண்டு செப்டம்பரிலும், கடந்த மார்ச் மாதத்திலும் விற்பனையில் இந்தியாவின் நம்பர்1 இருசக்கர வாகனமாக ஆக்டிவா இருந்தது குறிப்பிடத்தக்கது.

3. ஹீரோ பேஸன்
கடந்த நிதி ஆண்டில் மூன்றாவது இடத்தை ஹீரோ பேஸன் பெற்றுள்ளது. கடந்த நிதி ஆண்டில் 14,47,877 பேஸன் பைக்குகளை ஹீரோ விற்பனை செய்தது.

4. ஹீரோ டீலக்ஸ்
கடந்த நிதி ஆண்டில் 4ம் இடத்தில் மற்றொரு ஹீரோவின் தயாரிப்பான டீலக்ஸ் உள்ளது. கடந்த நிதி ஆண்டில் 10,33,332 டீலக்ஸ் பைக்குகள் விற்பனையாகியுள்ளன.

5. பஜாஜ் டிஸ்கவர்
பஜாஜ் ஆட்டோவின் அஸ்திரமான டிஸ்கவர் பைக் 5ம் இடத்தை பிடித்தது. கடந்த நிதி ஆண்டில் 9,85,679 டிஸ்கவர் பைக்குகளை பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்துள்ளது.

6. ஹோண்டா ஷைன்
கடந்த நிதி ஆண்டில் விற்பனை அடிப்படையில் 6ம் இடத்தை ஹோண்டா ஷைன் பெற்றது. மொத்தம் 7,28,766 ஷைன் பைக்குகளை ஹோண்டா விற்பனை செய்தது.

7. டிவிஎஸ் எக்ஸ்எல்
டாப்- 10 லிஸ்ட்டில் இடம்பிடித்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரே மாடல் டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்தான். கடந்த நிதி ஆண்டில் 7,22,920 எக்ஸ்எல் எச்டி மொபைட்டுகளை டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. அதற்கு முந்தைய நிதி ஆண்டு விற்பனையைவிட இந்த எண்ணிக்கை குறைவு.

8. பஜாஜ் பல்சர்
பஜாஜ் ஆட்டோவின் வெற்றிகரமான பிராண்டான பல்சர் 8வது இடத்தை பிடித்தது. கடந்த நிதி ஆண்டில் 6,00,689 பல்சர் பைக்குகளை பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்துள்ளது.

9. ஹோண்டா ட்ரீம் சீரிஸ்
கடந்த நிதி ஆண்டில் ட்ரீம் வரிசையில் 5,65,149 பைக்குகளை ஹோண்டா விற்பனை செய்துள்ளது.

10. பஜாஜ் பிளாட்டினா
பஜாஜ் ஆட்டோவின் என்ட்ரி லெவல் பைக்கான பிளாட்டினா டாப்-10 பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. கடந்த நிதி ஆண்டில் 4,59,785 பிளாட்டினா பைக்குகளை பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








