செப்.18ல் புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தும் ட்ரையம்ஃப்!
வரும் 18ந் தேதி புதிய மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது ட்ரையம்ஃப். புதிய மாடல் விபரங்களை தெரிவிக்காமல், ஒரு டீசரையும் வெளியிட்டிருக்கிறது.
இங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறவனம் பிரிமியம் வகை மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

தற்போது போனிவில், போனிவில் டி100, த்ரிக்ஸ்டன், ஸ்ட்ரீட் ட்ரிப்பிள், டேடோனா 675, டேடோனா 675ஆர், டைகர் 800எக்ஸ்சி, டைகர் எக்ஸ்ப்ளோரர், தண்டர்பேர்டு ஸ்ட்ராம், ராக்கெட்3 ரோட்ஸ்டெர் உள்ளிட்ட பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், வரும் 18ந் தேதி புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருப்பதாக டீசரில் தெரிவித்துள்ளது. அந்த பைக் ஒரு க்ரூஸர் மாடல் என்பது உறுதியாகியுள்ளது.
இதனிடையே, இந்தியா உள்ளிட்ட ஆசிய மார்க்கெட்டுகளுக்காக தயாரிக்கப்பட இருந்த 250சிசி பைக் திட்டத்தை ட்ரையம்ஃப்ட் ஒத்திப்போடுவதாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








